KOLNews

விரைவில் சிஎஸ்கே அணிக்கு மீண்டும் திரும்புவேன்..! - ரெய்னா

மும்பை,   ஐபிஎல் போட்டியில் இருந்து திடீரென விலகிய ரெய்னா, இது குறித்து தெரிவித்திருப்பதாவது 

சிஎஸ்கே அணி உரிமையாளர் சீனிவாசன் என்னை அவரது மகன் போல் பார்க்கிறார். அணி உரிமையாளர் சீனிவாசன் கூறியதை ஒரு தந்தை திட்டியது போல் தான் உணருகிறேன். அணியில் இருந்து நான் விலகியது பற்றி சீனிவாசன் தெரிவித்த கருத்துக்கள் தவறாக எடுத்துக் கொள்ளப்பட்டன. தனிமையில் இருந்தாலும் பயிற்சியில் தான் இருக்கிறேன். விரைவில் சிஎஸ்கே அணிக்கு மீண்டும் திரும்புவேன்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 4 முதல் 5 ஆண்டுகள் விளையாட விரும்புகிறேன். சிஎஸ்கே கேப்டன் டோனியுடன் எந்தப் பிரச்சினையும் இல்லை. குடும்ப சூழ்நிலை கருதியே ஐபிஎல் போட்டியில் இருந்து விலகும் முடிவை எடுத்தேன்.

என அவர் கூறினார்.

English Summary

I will be back to the CSK team soon ..! - Raina

Latest Articles

KOLNews