KOLNews

ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது இந்தியா..! - 2 விக்‍கெட்டுகளை கைப்பற்றினார் நடராஜன்

ஆஸ்திரேலியாவுடனான முதல் 2 ஒருநாள் போட்டிகளில் தோல்வியை தழுவிய இந்தியா , இன்று 

கேன்பராவில் நடைபெற்ற 3-வது ஒருநாள் கிரிக்‍கெட் போட்டியில், ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது. 

முன்னதாக டாஸ் வென்ற இந்திய அணி, பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது. நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 302 ரன்களை குவித்தது. கேப்டன் விராட் கோலி 63 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்த நிலையில், அதிரடியாக விளையாடிய ஹர்திக் பாண்ட்யா 76 பந்துகளில் 92 ரன்களுடனும், ஜடேஜா 50 பந்துகளில் 5 பவுண்டரி, 3 சிக்சர்களுடன் 66 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

அதன் பின், 303 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கு நோக்கி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணியின்  துவக்க வீரர் லபுசாங்கே 7 ரன்கள் எடுத்த நிலையில், தமிழக வீரர் நடராஜனின் பந்தில் அவுட் ஆனார். இதன் மூலம் சர்வதேச கிரிக்‍கெட்டில், நடராஜன் முதல் விக்‍கெட் இதுவாகும்.

இதனையடுத்து நிதானமாக ஆடிய கேப்டன் ஃபின்ச் 75 ரன்களுடனும், அதிரடியாக விளையாடிய மேக்ஸ்வெல்  4 சிக்‍சர்கள், 3 பவுண்டரிகள் என 38 பந்துகளில் 59 ரன்கள் எடுத்தார். இறுதியில் அந்த அனைத்து விக்‍கெட்டுகளையும் இழந்து 289 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 13 ரன்கள் வித்தியாசத்தில் அந்த அணி தோல்வியுற்றது. இந்திய தரப்பில் தாக்கூர்  3 விக்‍கெட்டுகளையும், நடராஜன் மற்றும் பும்ரா தலா 2 விக்‍கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இருப்பினும் 3 போட்டிகளில் 2 போட்டிகளை வென்றதன் மூலம் ஆஸ்திரேலிய அணி கோப்பையை வென்றது

English Summary

India defeated Australia ..! - Natarajan took 2 wickets

Latest Articles

KOLNews