கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நடப்பாண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. வரும் 19ம் தேதி அபுதாபியில் தொடங்கும் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் சென்னை சூப்பர் கிங்ஸ் சந்திக்கவுள்ளது.
இந்த வருடம் கொரோனா நோய்த்தொற்று பரவல் அச்சத்தின் காரணமாக இந்திய ஐபிஎல் கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறுகிறது. இதற்காக அனைத்து அணிகளும் தற்போது அங்கு சென்று பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் போட்டி அட்டவணையை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. அதன்படி இந்த முதல் ஆட்டம் வரும் 19ம் தேதி ,இந்திய நேரம் இரவு 7 -30 மணிக்கு தொடங்குகிறது.
முதல் போட்டியிலேயே இரண்டு வலுவான அணிகள் மோதுவது, ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.
English Summary
IPL cricket schedule released ..! - Expectation on the first match rises