KOLNews

ஐபிஎல்..! சாம்பியன் பட்டத்தை வென்றது மும்பை அணி ..!

துபாய்: ஐ.பி.எல்., தொடரில் பைனலில், 5 விக்கெட் வித்தியாசத்தில் டில்லி அணியை வீழ்த்தி,  'நடப்பு சாம்பியன்' அந்தஸ்தை மும்பை அணி தக்கவைத்துக் கொண்டுள்ளது. ஐக்கிய அரபு எமிரேட்சில் நடந்த  ஐ.பி.எல்., தொடரின் 13வது சீசனில், நேற்று  துபாயில் நடந்த இறுதி போட்டியில்  மும்பை, டில்லி அணிகள் மோதின. 

முன்னதாக 'டாஸ்' வென்ற டில்லி அணி கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பேட்டிங் தேர்வு செய்தார்.

டில்லி அணிக்கு ரிஷாப் பன்ட் (56), கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் (65) அரைசதம் கடந்து கைகொடுத்தாலும் , 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 156 ரன்கள் மட்டுமே எடுத்தது. மும்பை சார்பில் பவுல்ட் 3 விக்கெட் கைப்பற்றினார்.

எளிதில் எட்டக்கூடிய இலக்குடன் களம் இறங்கிய மும்பை அணிக்கு, கேப்டன் ரோகித் சர்மா வின் 68 ரங்களும், இஷான் கிஷான் 33 ரங்களும் கைகொடுக்க, 18.4 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 157 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதன்மூலம் 5வது முறையாக (2013, 2015, 2017, 2019, 2020) சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி தனது ரசிகர்களை மீண்டும் ஒரு ஒரு முறை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது மும்பை அணி.

English Summary

IPL ..! Mumbai team wins championship

Latest Articles

KOLNews