KOLNews

இன்று ஐ.பி.எல். இறுதி போட்டி ! - மும்பையை வெல்லுமா டெல்லி..?

எதிர்பாராத பல திருப்பங்களை ஏற்படுத்திய ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் இறுதிபோட்டியில் இன்று மும்பை மற்றும் டெல்லி அணிகள் பலப்பரிட்சை நடத்துகின்றன. ஐக்கிய அரபு எமிரேட்சில், கடந்த செப்டம்பர் மாதம் 19ம் தேதி 13வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடக்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 

லீக் ஆட்டங்களில் கிடைத்த புள்ளிகளின் அடிப்படையில் மும்பை, டெல்லி, பெங்களூர், ஐதராபாத் ஆகிய அணிகள் 'ப்ளேஆஃப்' சுற்றுக்கு தகுதி பெற்றன. டெல்லி அணியை வீழ்த்து மும்பை அணி நேரடியாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. வெள்ளிக்கிழமை நடந்த எலிமினேட்டர் ஆட்டத்தில் ஐதராபாத் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரை வீழ்த்தி வெளியேற்றியது. நேற்று முன்தினம் நடந்த 'குவாலிபையர் 2' ஆட்டத்தில் டெல்லி அணி 17 ரன்னில் ஐதராபாத்தை தோற்கடித்து இறுதி போட்டியில் நுழைந்தது. 

அதையடுத்து, இன்று துபாயில் இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு நடைபெறும் இறுதி ஆட்டத்தில் மும்பை - டெல்லி அணிகள் மோதவுள்ளன. 6வது முறையாக இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ள மும்பை அணி ஏற்கனவே 4 முறை கோப்பையை கைப்பற்றியுள்ளது கவனிக்கத்தக்கது. இந்நிலையில் இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்று 5வது முறையாக மீண்டும் கோப்பையை கைப்பற்றுமா ? என்பதை அதன் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துவருகின்றனர்.

இருப்பினும் அனுபவம் வாய்ந்த மும்பை அணியை சமாளிப்பது, டெல்லிக்கு சற்று கடினமான ஒன்றாக இருக்கும் என்பதால், போட்டி கடுமையானதாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

English Summary

IPL today The final match! - Will Delhi beat Mumbai?

Latest Articles

KOLNews