KOLNews

கபடி..! - தங்கம் வென்றார் தேனி மாணவர்..!

நேபாள இளைஞர் மற்றும் விளையாட்டு கூட்டமைப்பு சார்பில் நடத்தப்பட்ட தேசிய அளவிலான கபடி போட்டியில் தேனி மாவட்டம் கம்பத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர் கலந்து கொண்டு தங்கம் வென்றுள்ளார்.

நேபாள நாட்டில் கோங்குரா நகரில் .மார்ச் 15ல் தொடங்கி மார்ச் 19 வரை இப்போட்டி நடைபெற்றது, இதில் இந்திய அணியும், நேபாள அணியும் களம் இறங்கின. இந்திய அணி சார்பில் தேனி மாவட்டத்தில் இருந்து கம்பத்தைச் சேர்ந்த லோகநாதன் (23), என்ற கல்லூரி மாணவர் பங்கேற்றார்.

இவருடன் தேனி அம்மச்சியாபுரத்தைச் சேர்ந்த அஜித், தமிழ், தேவாரத்தைச் சேர்ந்த ஸ்டாலின், கோபி கர்மபரியைச் சேர்ந்த சுரேஷ்குமார் ஆகியோரும் கலந்துகொண்டனர். அத்துடன், தெலுங்கானா, மற்றும் ஆந்திர மாநிலத்தைச் சார்ந்தர்வர்கள் உட்பட 11 பேர் கலந்து கொண்டனர். போட்டியில் இந்திய அணி 43 - 20 புள்ளி கணக்கில் நேபாளம் அணியை வீழ்த்தி வெற்றி பெற்று தங்கப் பதக்கம் வென்றது. 

அதையடுத்து, வெற்றி பெற்று சொந்த ஊருக்கு திரும்பிய வீரர்களுக்கு பொதுமக்கள்,மற்றும் அரசியல் கட்சியினர் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

தங்கம் வென்ற லோகநாதன் உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்க தேவர் கல்லூரியில் முதலாம் ஆண்டு உடற்கல்வியியல் படித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

English Summary

Kabadi ..! - Theni student wins gold ..!

Latest Articles

KOLNews