KOLNews

மாரியப்பன் தங்கவேலுக்கு கேல் ரத்னா விருது..!

சேலத்தை சேர்ந்த மாரியப்பன் தங்கவேலுக்கு கேல் ரத்னா விருது அறிவிக்கப்பட்டு இருப்பதால் அவரது குடும்பத்தினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

முன்னதாக இந்தியாவில் விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதான ராஜீவ் காந்தி கேல் ரத்னா மற்றும் துரோணாச்சார்யா விருதுகள் பெறுவோர் பட்டியலை மத்திய அரசு நேற்று அறிவித்தது.

இதன்படி இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் சர்மா, 2016-ம் ஆண்டு ஒலிம்பிக்கில் உயரம் தாண்டுதலில் தங்கப்பதக்கம் வென்ற சேலத்தைச் சேர்ந்த வீரர் மாரியப்பன் தங்கவேலு ஆகியோருக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மகிழ்ச்சி அடைந்துள்ள மாரியப்பனின் குடும்பத்தினர் அவர் இன்னும் பல சாதனை படைப்பார் என நம்பிக்கை தெரிவித்துள்ளனர்

அதே போல் வீரர் மாரியப்பன் தங்கவேலு விற்கு மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அன்புமணி ராமதாஸ் ஜி கே வாசன் தினகரன் பிஜேபி முருகன் உள்ளிட்டோரும்  வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

English Summary

Kale Ratna Award for Mariappan Thangavelu

Latest Articles

KOLNews