KOLNews

சிங்க பெண்கள்..! - 2020 ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய மகளிர் ஹாக்கி அணி தகுதி..!

ஒடிசா மாநிலம் புவனேசுவரத்தில் உள்ள கலிங்கா ஸ்டேடியத்தில், 2020 ஆம் ஆண்டில் டோக்கியோவில் நடைபெற உள்ள ஹாக்கி போட்டிக்கான தகுதிச் சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வருகிறது.

நேற்று, இதில் பெண்கள் பிரிவில் நடந்த முதல் சுற்று ஆட்டத்தில் இந்திய அணி அமெரிக்க அணியை 5-1 என்ற கோல் கணக்கில் வென்றது. 

அதைத்தொடர்ந்து, இன்று நடந்த இரண்டாவது சுற்றில் 6-5 என்ற கோல் கணக்கில் இந்திய அணி வெற்றி பெற்றது.

இதனால் அடுத்த வருடம் டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிக்கு  இந்திய மகளிர் அணி தகுதி பெற்றுள்ளது.

இதே போல ஹாக்கி போட்டிக்கான ஆண்கள் பிரிவில் இந்திய அணி ரஷ்யாவுடன் தற்போது விளையாடி வருகிறது. நேற்று நடந்த முதல் சுற்று ஆட்டத்தில் இந்திய அணி ரஷ்யாவை 4-2 என்ற கோல் கணக்கில் வென்றது. இன்று நடைபெறும் ஆட்டத்தில் இந்திய அணி ‘டிரா’ செய்தாலே சிக்கலின்றி ஒலிம்பிக் வாய்ப்பை பெற்று விடலாம் என்கிற நிலையில் உள்ளது.

English Summary

Lioness girls ..! Indian women's hockey team qualifies for 2020 Olympics

Latest Articles

KOLNews