KOLNews

டோக்கியோ ஒலிம்பிக்கில் மதுரை வீராங்கனை..! - தமிழகத்தை உற்சாகப்படுத்தும் ரேவதி வீரமணி..!

ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் பெறுவது என்பது ஒவ்வொரு தடகள வீரர் மற்றும் வீராங்கனைக்கும் உள்ள உச்ச பட்ச கனவு. இதனை சாதிக்க பல நாடுகளில்,  திறன் கொண்டவர்களை சிறு வயதிலேயே அடையாளம் கண்டு அவர்களின் திறனை மேம்படுத்துகிறார்கள். 

இந்நிலையில், மதுரையை சேர்ந்த ஓட்டப்பந்தய வீராங்கனை ரேவதி வீரமணி, டோக்கியா ஒலிம்பிக்கில் , 400 மீட்டர் ஓட்டப்பந்தயம் மற்றும் ரிலே ஓட்டங்களில் பங்கேற்க தேர்வு செய்யப்பட்டுள்ளார. இது மதுரை மட்டுமல்லாமல் ஒட்டு மொத்த தமிழகத்தையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

முன்னதாக டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பதற்காக , 26 பேர் கொண்ட தடகள அணியை இந்திய தடகள சம்மேளம் அறிவித்தது . இதில் , தனிநபர்  தடகள போட்டிகளில் பங்கேற்கும் 16 போ , ஆடவருக்கான 400 மீட்டர்  ரிலேவுக்காக 5 பேரும், கலப்பு  ஆடவருக்கான  400 மீட்டர் ரிலேவுக்காக 2 ஆடவா 3 மகளிர ஆகியோர் அடங்குவர்.

இந்நிலையில் , மதுரையை சேர்ந்த மிகவும் ஏழ்மையான குடும்பத்தில், அதுவும் பெற்றோரை சிறு வயதிலேயே இழந்து, பாட்டியின் அரவணைப்பில் வளர்ந்த ரேவதி , ஒலிம்பிக்கில் இந்திய தடகள அணியில் கலப்பு தொடர் ஓட்டத்தில் விளையாட தகுதி பெற்றுள்ளார் . கால் ஷூ கூட வாங்க முடியாத நிலையில்  ஒலிம்பிக்கில் தடம் பதிக்க உள்ளார்  ஏற்கனவே ஜுனியர் மற்றும் சீனியர் பிரிவில் மாநில தேசிய போட்டிகளில் வெற்றி பெற்றுள்ள ரேவதி கடந்த மாதம் நடந்த தகுதிச்சுற்றில் 400 மீட்டர் போட்டியின் இலக்கை 53 புள்ளி ஐந்து ஐந்து விநாடிகளில் கடந்து சாதனை படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

English Summary

Madurai athlete at Tokyo Olympics ..! - Revathi Veeramani to cheer Tamil Nadu ..!

Latest Articles

KOLNews