1977முதல் 1994-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் கால்பந்து விளையாட்டில் உலகளவில் உள்ள கால்பந்து ரசிகர்களை கிரண்டடித்த அர்ஜென்டினா கால்பந்து அணியின் முன்னாள் கேப்டனும், ஜாம்பவானுமான மரடோனா நேற்று மாரடைப்பால் காலமானார்.
முன்னதாக, கடந்த 2-ந் தேதி உடல் நலக்குறைவு காரணமாக பியூனஸ் அயர்சில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட மரடோனாவுக்கு மூளையில் ரத்த உறைவு ஏற்பட்டு இருப்பது தெரியவந்தது. அதையடுத்து ஆபரேஷன் செய்யப்பட்டு ரத்த உறைவு அகற்றப்பட்டது.

அதன் பின் ஒரு வாரம் ஆஸ்பத்திரியில் தங்கி சிகிச்சை பெற்ற அவர் வீடு திரும்பிய நிலையில் நேற்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார் மரடோனா.

கால்பந்து விளையாட்டில் பிரேசில் ஜாம்பவான் பீலேவுக்கு நிகராக பார்க்கப்பட்ட மரடோனா, 1986-ம் ஆண்டு உலக கோப்பையை அர்ஜென்டினாவுக்கு வென்று கொடுத்தார். அணியின் கேப்டனாக இருந்த மரடோனா 4 உலக கோப்பை போட்டியிலும் (1982, 1986, 1990, 1994), அர்ஜென்டினா அணிக்காக 91 சர்வதேச போட்டிகளில் விளையாடி 34 கோல்கள் அடித்துள்ளார். பார்சிலோனா, நபோலி, செவில்லா உள்ளிட்ட கிளப் அணிகளுக்காகவும் விளையாடியவர், அவர் மொத்தம் 491 கிளப் போட்டிகளில் ஆடி 259 கோல்கள் அடித்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது .
English Summary
Maradona passes away ..! - All-world football fans crying along with Argentina