KOLNews

ஒலிம்பிக் ஹாக்கி ..! - ஸ்பெயினை தோற்கடித்தது.இந்தியா..!

ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கியில் குரூப் ஏ பிரிவில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இந்தியா அபாரமாக ஆடி  ஸ்பெயினை தோற்கடித்தது.

முன்னதாக ஜப்பான தலைநகர் டோக்கியோவில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியின் ஆடவர் ஹாக்கியில் இன்று இந்தியாவும் , ஸ்பெயினும் களமிறங்கின.

இந்த ஆட்டத்தில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணி வீரர்கள் 3 கோலை அடித்து அசத்தினர்  தொடக்கம் முதலே போட்டியில் இந்தியா ஆதிக்கம் செலுத்தியது . முன்கள வீரரான சிமரஞ்சித சிங் 14 நிமிடத்தில் முதல் கோலையும், 5 வது நிமிடத்தில் ரூபிந்தர் பால் சிங் 2வது கோலையும்  அடித்து, இரண்டுக்கு பூஜ்ஜியம் என்ற நிலையில் இந்தியா முன்னிலை வகித்தது . அதன் பின் போட்டி முடியும் தருவாயில் 51 வது நிமிடத்தில் ரூபிந்தர பால சிங் மற்றொரு கோலை அடித்தார் .

Tokyo Olympics: Team India's tremendous comeback in hockey, beat Spain 3-0  | Daily India Sportsபோட்டியின் இறுதி  வரை ஸ்பெயின் கோல் அடிக்காததால் , மூன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் இந்தியா வெற்றி பெற்று தனது 2 வது வெற்றியை பதிவு செய்தது . 

இதற்கு முன்தைய ஆட்டங்களில் நியூசிலாந்து அணியுடன் வெற்றியும் , ஆஸ்திரேலிய அணியுடன் தோல்வியும் அடைந்திருந்த நிலையில், இந்தியா இந்த  3 போட்டியில் 2 வெற்றியை பதிவு செய்து புள்ளிப் பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறி உள்ளது.

English Summary

Olympic hockey ..! - India beat Spain ..!

Latest Articles

KOLNews