KOLNews

பட்டையை கிளப்பிய பாண்டியா..! - ஆஸ்திரேலியாவுடனான டி-20 தொடரை வென்றது இந்தியா..!

ஆஸ்திரேலிய அணியுடனான 3 ஒரு நாள் போட்டியில்,  2ல் தோல்வியை தழுவியதால் அத்தொடரை இழந்த இந்தியா, அதற்கு பதிலடி தரும் விதமாக 3 டி-20 கிரிக்கெட் போட்டிகளில் , 2 ல் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது. 

நேற்று நடந்த 2வது  டி-20 போட்டியில், இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம், 3 போட்டிகள் கொண்ட தொடரை 2-க்கு பூஜ்யம் என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.

முன்னதாக  கான்பெர்ராவில் நடந்த முதலாவது டி-20 போட்டியில் இந்திய அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற  நிலையில், சிட்னியில் நேற்று நடைபெற்ற 2-வது போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது. அபாரமாக ஆடிய ஆஸ்திரேலிய அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 194 ரன்கள் குவித்தது. தமிழக வீரர் நடராஜன் சிறப்பாக பந்து வீசி, 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

அதன் பின், 195 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் ராகுல் 30 ரன்களுடனும், ஷிகர் தவான் 52 ரன்களுடனும், கோலி 40 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். கடைசி ஓவரில் வெற்றிக்கு 14 ரன்கள் தேவை என்ற நிலையில், முதல் பந்தில் 2 ரன்கள் எடுத்த ஹர்திக் பாண்டியா, அடுத்தடுத்து 2 சிக்சர்களை அடித்து இந்திய அணியை வெற்றி பெற செய்தார்.

English Summary

Pandya rocks ..! - India wins T20 series against Australia ..!

Latest Articles

KOLNews