KOLNews

போடு போடுன்னு போட்ட போலார்டு .! - சென்னை அணியை வீழ்த்தியது மும்பை

14வது ஐ.பி.எல்.தொடரில்,  நேற்று நடைபெற்ற சென்னைக்கு எதிரான ஐ.பி.எல்., லீக் போட்டியில் மும்பை அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

முன்னதாக. 'டாஸ்' வென்ற மும்பை அணி கேப்டன் ரோகித் சர்மா 'பீல்டிங்' தேர்வு செய்தார். மொயீன் அலி, 33 பந்தில் அரைசதம் எட்டி, பின் பும்ராவின் பந்தில்  58 ரன்களுடன், ( 5 சிக்சர், 5 பவுண்டரி) வெளியேறினார். பின் அடுத்தடுத்த விக்கெட்டுகள் சரிந்த நிலையில்  ககளமிறங்கிய அம்பதி ராயுடு தொடர்  சிக்சர்களை  போட்டு தாக்கியதால் விளைவாக சென்னை அணி 200 ரன்னை கடந்தது.சென்னை அணி 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 218 ரன் குவித்தது. ராயுடு (72 ரன், 7 சிக்சர், 4 பவுண்டரி), ஜடேஜா (22) அவுட்டாகாமல் இருந்தனர்.

அதன் பின் களமிறங்கிய மும்பை அணிக்கு குயின்டன் டி காக் (38), கேப்டன் ரோகித் சர்மா (35) ஜோடி கொடுத்த நல்ல துவக்கம் தொடராமல் விக்கெட்டுகள் சரியாய் துவங்கின. இருப்பினும் அணியின் நிலையை மாற்றிய போலார்டு சிக்சர் மழை பொழிந்தார். இருப்பினும் ஒரு பந்தில் 2 ரன் எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இருப்பினும் அதையும் அடித்து, மும்பை அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 219 ரன் எடுத்து வெற்றி பெற வைத்தார். ஆட முடிவில் போலார்டு (87 ரன், 8 சிக்சர், 6 பவுண்டரி) அவுட்டாகாமல் இருந்தார்.

English Summary

Put it on, put it on Pollard! - Mumbai beat Chennai

Latest Articles

KOLNews