KOLNews

அரையிறுதிக்கு முன்னேற்றினார் பி.வி. சிந்து.! - ஸ்விஸ் ஓபன் பேட்மிண்டன்

சுவிட்சர்லாந்தில் நடைபெற்று வரும் விஸ் ஓபன் பேட்மிண்டன் போட்டியில், இந்தியா சார்பில் மகளிர் பிரிவு ஒற்றையரில் பி.வி. சிந்து மற்றும் பூஷணன் ஓங்பாம்ரங்பான் விளையாடினர்.இந்த போட்டியில்  சிந்து 21-16, 23-21 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.  அதே போல, ஆடவர் பிரிவு ஒற்றையரில் ஸ்ரீகாந்த் மற்றும் கன்டபோன் வாங்சரோயென் விளையாடினர்.  இந்த போட்டியில், 21-19, 21-15 என்ற செட் கணக்கில் ஸ்ரீகாந்த் வெற்றி பெற்றார்.

அத்துடன், கலப்பு இரட்டையர் காலிறுதி போட்டி ஒன்றில் இந்தியாவின் சாத்விக் சாய்ராஜ் ராங்கிரெட்டி மற்றும் அஸ்வினி பொன்னப்பா இணை 17-21, 21-16, 18-21 என்ற செட் கணக்கில் மலேசியாவின் டான் கியான் மெங் மற்றும் லாய் பெய் ஜிங் இணையிடம் தோல்வியடைந்தது. 

English Summary

P.V. Sindhu advanced to the semifinals..! - Swiss Open Badminton

Latest Articles

KOLNews