KOLNews

வெள்ளி பதக்கம் வென்றார் பி.வி. சிந்து..!

இந்திய ரசிகர்களால்  பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சுவிட்சர்லாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டியில், மகளிர் ஒற்றையர் பிரிவின் இறுதி ஆட்டத்தில்  வெற்றிவாய்ப்பை இழந்தார் பி.வி. சிந்து

முன்னதாக, பாசெல் நகரில் நடந்து வரும் சுவிட்சர்லாந்து ஓபன் பேட்மிண்டன் போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவு அரை இறுதியில், உலக சாம்பியனான இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, டென்மார்க்கின் மியா பிளிச்பெல்டை   22-20, 21-10 என்ற நேர்செட்டில் பிளிச்பெல்டை தோற்கடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறியிருந்தார். 

இந்நிலையில், இன்று நடந்த இறுதி போட்டியில் ஸ்பெயின் நாட்டின் கரோலினா மரினை எதிர்கொண்ட பி.வி. சிந்து,  முதல் ஆட்டத்தில் அவருக்கு சற்று திணறலை தந்தார்.

ஆனால், 2வது கேமில் ,  கரோலினா மரின் 14-2 என்ற செட் கணக்கில் சிந்துவை திணறடித்து, முழு போட்டியிலும்  தனது ஆளுமையை காட்டி போட்டியை  கைப்பற்றினார்.  35 நிமிடங்கள் நீடித்த இந்த போட்டியின் முடிவில் 12-21, 5-21 என்ற செட் கணக்கில் சிந்துவை வீழ்த்தி வெற்றி பெற்றார்.  

அதையடுத்து இந்திய வீராங்கனை சிந்துவுக்கு வெள்ளி பதக்கம் கிடைத்தது.

English Summary

P.V. Sindhu wins silver medal ..!

Latest Articles

KOLNews