KOLNews

45 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் படு தோல்வி..! - சென்னை சூப்பர் கிங்ஸ் அபாரம்..!

நேற்று நடைபெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் 45 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றது.

முதலில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதையடுத்து பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஆட்ட ஆரம்பத்திலேயே அதிரடியாக ஆடியது.  தொடக்க ஆட்டக்காரர் டுபிளசிஸ், 17 பந்துகளில் 33 ரன்கள்ளுடன்  ஆட்டமிழந்தார். மோயின் அலி 26 ரன்கள், சுரேஷ் ரெய்னா 18 ரன்கள், அம்பத்தி ராயுடு 27 ரன்கள், கேப்டன் தோனி 18 ரன்கள், பிராவோ 20 ரன்கள் என அடுத்தடுத்து களமிறங்கிய இவர்கள், தங்கள் பங்கிற்கு ரன்களை குவித்தனர். இதனால், 20 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 9 விக்கெட் இழப்பிற்கு 188 ரன்கள் என்கிற சவுகரியமான எண்ணிக்கையை அடைந்தது. 

அதன் பின், 189 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பேட்டிங்கை துவக்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில், தொடக்க ஆட்டக்காரர் ஜோஸ் பட்லர் மட்டும் 49 ரன்கள் குவித்தார். இருப்பினும் மற்ற வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர்.

இதனால், 20 ஓவர்கள் முடிவில், ராஜஸ்தான் அணி 9 விக்கெட் இழப்பிற்கு 143 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 45 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் பெரும் வெற்றி பெற்றது. சிறப்பாக பந்துவீசிய மோயின் அலி, 3 ஓவர்கள் வீசி 7 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

English Summary

Rajasthan Royals lose by 45 runs ..! - Chennai Super Kings splendid..!

Latest Articles

KOLNews