KOLNews

திசை மாற்றிய புற்றுநோய் ..! - முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் வருத்தம்

இன்றைய பிரச்னைகளிலிலிருந்து மீண்டு வர விரும்பும் இளைஞர்களுக்கு முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் ஒரு எடுத்துக்காட்டாக அறியப்படுகிறார்.

இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியில் கங்குலியின் ஓய்வுக்குப் பிறகு தனக்கு கிடைத்த வாய்ப்பு புற்றுநோய் காரணமாக பறிபோய் விட்டதாக  யுவராஜ் சிங் தெரிவித்துள்ளார்.

2007 ஆம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் ஒரே ஓவரில் 6 சிக்சர்கள் அடித்து அணியின் வெற்றிக்கு உதவியது,  2011ஆம் ஆண்டு உலகக் கோப்பை போட்டியின் போது தனது  திறமையால் அணிக்கு வெற்றிக் கனியை பறித்து கொடுத்து தொடர்நாயகன் விருதையும் கைப்பற்றியது  போன்ற நிகழ்வுகள் இந்திய கிரிக்கெட் ரசிகர்களால் மறக்கமுடியாதது.

இந்நிலையில் யுவராஜ் சிங்கின் கிரிக்கெட் வாழ்க்கை அவருக்கு ஏற்பட்ட புற்றுநோய் காரணமாக திசை திரும்பிய பின், அணியில் அவருக்கு இடம் கிடைக்கவில்லை என நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

இதையடுத்து, அவரது ரசிகர்கள், யுவராஜின் இந்த ஆதங்கம் புரிந்துகொள்ளக்கூடியதே..!,  என சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

English Summary

Redirected cancer ..! - Former cricketer Yuvraj Singh upset

Latest Articles

KOLNews