KOLNews

அடுத்த ஆண்டுடன் ரிடைர்டா..? - என்ன சொல்கிறார் மிதாலி ராஜ்..?

இந்திய மகளிர் ஒரு நாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் மிதாலி ராஜ், அடுத்த ஆண்டு  நியூஸிலாந்தில் நடைபெறவுள்ள மகளிர் மூவர் உலகம் கோப்பை போட்டியே சர்வதோ கிரிக்கெட்டில் நான் விளையாடும் கடைசி போட்டியாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.

இந்திய மகளிர் அணியின் தலைசிறந்த வீராங்கனையாக வலம் வரும் 36 வயதான மிதாலிராஜ்,  தில்லியில் நடைபெற்ற கிரிக்கெட் தொடர்பான புத்தக வெளியீட்டு விழாவில்பங்கேற்றார். 

அங்கு அவர் பேசுகையில்,  "சர்வதேச கிரிக்கெட் போட்டியில் 21 ஆண்டுகள் விளையாடிவிட்டேன். அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள 50 ஓவர் உலகக் கோப்பை போட்டியே எனது கடைசி போட்டியாக

இருக்கும். கரோனா தொற்று வேகமாக பரவி வரும் இந்தக் காலக் கட்டம் கடினமானதுதான். எனினும் எனது உடற்தகுதியை பராமரிப்பதற்காக பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டுள்ளேன். நான் இளம் வீராங்கனை அல்ல, மூத்த வீராங்கனை, எனவே, நான் முழு உடற்தகுதியோடு இருப்பது முக்கியமானதாகும். உலகக் கோப்பை

போட்டிக்கு முன்னதாக சில தொடர்களில் மட்டுமே விளையாடவுள்ளோம். அதனால் அந்தத் தொடர்களில் சிறப்பாக விளையாடுவது முக்கியமாகும்" என தெரிவித்தார். 

அத்துடன், 'என்னைப் பொருத்தவரையில் ஒவ்வொரு தொடருமே முக்கியமானதுதான். ஒவ்வொரு தொடரிலும் நான் சிறப்பாக பேட் செய்ய வேண்டும். கேப்டனாக இருப்பதால், அணியை ஒன்றிணைத்து வீராங்கனைகளை சிறப்பாக விளையாட வைப்பதற்கு தேவையான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்' என்றும் தெரிவித்தார்.

English Summary

Retired next year ..? - What is Mithali Raj saying ..?

Latest Articles

KOLNews