ரோஹித் சர்மா, 100-வது சர்வதேச டி20 ஆட்டத்தில் விளையாடும் முதல் இந்திய வீரர் என்கிற பெருமையை பெரும் நிலையில் உள்ளார்.
ராஜ்கோட்டில் இன்று, இந்தியா, வங்கதேசம் அணிகளுக்கிடையிலான 2-வது டி20 ஆட்டத்தில் விளையாடுவதன் மூலம் 100-வது சர்வதேச டி20 ஆட்டத்தில் விளையாடும் முதல் இந்திய வீரர் என்ற சாதனையை ரோஹித் சர்மா படைக்கவுள்ளார்.
அதோடு, சர்வதேச அளவில் 100 டி20 ஆட்டங்களில் விளையாடும் 2-வது வீரர் என்ற பெருமையையும் இவர் பெறவுள்ளார்.

முன்னதாக,பாகிஸ்தானின் சோயப் மாலிக் மட்டுமே 111 சர்வதேச டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். இந்திய அணியில் ரோஹித் சர்மாவுக்கு அடுத்தபடியாக அதிக டி20 ஆட்டங்களில் விளையாடிய வீரராக தோனி (98 ஆட்டங்கள்) இருப்பது தெரிந்திருக்கலாம்.
இந்நிலையில், சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் வரிசையிலும் முதலிடத்தில் உள்ள ரோஹித் சர்மா இதுவரை விளையாடிய 99 ஆட்டங்களில் 2452 ரன்கள் குவித்துள்ளார். இதில், 4 சதம் மற்றும் 17 அரைசதங்களும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
Rohit Sharma going to set new record