KOLNews

ரூ.2,500 கோடி இழப்பு ஏற்படுமாம்..! - ஐபிஎல் போட்டியை தொடர முயல்கிறதா பிசிசிஐ..?

14-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி விறுவிறுப்பான கட்டத்தை எட்டிய நிலையில்,  கொரோனா 2ஆம் அலையின் தாக்கத்தையடுத்து பாதியிலேயே தள்ளிவைக்கப்பட்டது. 

அத்துடன், வருண் சக்ரவர்த்தி, சந்தீப் வாரியர் (கொல்கத்தா நைட் ரைடர்ஸ்), விருத்திமான் சஹா (ஐதராபாத் சன்ரைசர்ஸ்), பயிற்சியாளர்கள் எல்.பாலாஜி, மைக் ஹஸ்சி (சென்னை சூப்பர் கிங்ஸ்), அமித் மிஸ்ரா (டெல்லி கேப்பிட்டல்ஸ்) போன்ற வீரர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். 

கொரோனா தொற்று, மருத்துவ உயிர் பாதுகாப்பு வளையத்தையும் (பயோ-பபுள்) மீறி வீரர்கள் இடையேயியும் பரவி, இந்திய கிரிக்கெட் வாரியத்தை செயலிழக்க செய்தது.  4 முக்கிய அணிக்குள் கொரோனா ஊடுருவியதால் வேறு வழியின்றி ஐ.பி.எல். போட்டியை ஒத்திவைக்க வேண்டியதாகி விட்டது.

இதற்கிடையே இது குறித்து கருத்து தெரிவித்துள்ள  பிசிசிஐ , "இன்னும் 31 ஆட்டங்கள் நடத்த வேண்டி உள்ள நிலையில்,  ஐ.பி.எல். போட்டியை நாங்கள் முழுமையாக நடத்த முடியாமல் போனால் கிட்டத்தட்ட ரூ.2,500 கோடி இழப்பு ஏற்படும் என்றும், 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு முன்பாக எஞ்சிய ஐ.பி.எல். ஆட்டங்களை நடத்த வேண்டுமென்றால் அதற்குரிய காலஇடைவெளியை உருவாக்க வேண்டும். இதையொட்டி அனைத்து நாட்டு கிரிக்கெட் வாரியங்களுடனும் பேச வேண்டும். நிறைய விஷயங்கள் இதில் உள்ளடங்கி இருக்கிறது. எனவே அதற்கான வேலையை படிப்படியாக தொடங்குவோம்", என தெரிவித்துள்ளது.

English Summary

Rs 2,500 crore loss ..! - Is BCCI trying to continue IPL match?

Latest Articles

KOLNews