KOLNews

சீனியர் கைப்பந்து..! தமிழக அணி தேசிய ‘சாம்பியன்’

ஒடிசா மாநிலம், புவனேசுவரத்தில் கடந்த 25-ந் தேதி முதல் நடந்து வந்த  68-வது தேசிய சீனியர் சாம்பியன்ஷிப் போட்டியில் ஆண்கள் பிரிவில் 29 அணிகளும், பெண்கள் பிரிவில் 27 அணிகளும் கலந்து கொண்டன.

அதில், நேற்று நடந்த ஆண்கள் பிரிவு இறுதிப்போட்டியில் தமிழக அணி, இந்தியன் ரெயில்வேயை எதிர்த்து ஆடியது .  இந்த ஆட்டத்தில் தமிழக அணி 25-18, 25-21, 21-25, 25-23 என்ற செட் கணக்கில் ரெயில்வேயை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது . தமிழக அணியில் அஸ்வின், நவீன்ராஜா ஜேக்கப், உக்கரபாண்டியன், வைஷ்ணவ் ஆகியோரின் அபார ஆட்டம் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது. தோல்வி கண்ட ரெயில்வே அணி 2-வது இடம் பிடித்தது.

இதனையடுத்து, தமிழக அணி 9-வது முறையாக இந்த சாம்பியன் பட்டத்தை கைப்பற்றிய பெருமையை பெற்றுள்ளது.

கடந்த 2013-ம் ஆண்டில் தமிழக அணி கோப்பையை வென்று இருந்தது. தேசிய போட்டியில் அசத்திய தமிழக அணி நாளை (சனிக்கிழமை) கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயில் மூலம் சென்னை வந்தடைகிறது. அணியினருக்கு ரெயில் நிலையத்தில் வரவேற்பு அளிக்கப்படும் என்று தமிழ்நாடு கைப்பந்து சங்க பொதுச்செயலாளர் ஏ.ஜே.மார்ட்டின் சுதாகர் தெரிவித்தார்.

English Summary

Senior volleyball ..! Tamil nadu Team Champion

Latest Articles

KOLNews