KOLNews

தோற்றார் செரீனா ..பட்டம் வென்றார் சிமோனா ஹாலெப்..!

விம்பிள்டன் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் இறுதிச் சுற்றில் அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸை வீழ்த்தி, ருமேனிய வீராங்கனை சிமோனா ஹாலெப்  சாம்பியன் பட்டத்தை வென்றார்.

முன்னதாக இன்று நடைபெற்ற விம்பிள்டன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் இறுதிச் சுற்றில், அமெரிக்க வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் மற்றும் ருமேனிய வீராங்கனை சிமோனா ஹாலெப் ஆகியோர் மோதினர். 

இதில், சிமோனா ஹாலெப் 6-2, 6-2 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வெற்றி பெற்றார். இது இவரது முதல் விம்பிள்டன் பட்டம், இரண்டாவது கிராண்ட்ஸ்லாம் பட்டமாகும். இதன்மூலம், விம்பிள்டன் பட்டத்தை வெல்லும் முதல் ருமேனிய வீராங்கனை என்ற பெருமையை ஹாலெப் பெற்றார். 

Image result for Serena lost .. Simona Halep wins..இந்நிலையில், இந்த போட்டியில் தோல்வியடைந்தால்  24-வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வெல்லும் இரண்டாவது வீராங்கனை என்ற சாதனையை சமன் செய்ய செரீனா வில்லியம்ஸ் மேலும் காத்திருக்கும் சூழல் உருவாகியுள்ளது.

சென்ற ஜனவரி மாதம் நடைபெற்ற ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் நான்காவது சுற்றில் செரீனா வில்லியம்ஸ், சிமோனா ஹாலெப்பை வீழ்த்தியிருந்த நிலையில், தற்போது சிமோனா ஹாலெப் செரீனா வில்லியம்சை வீழ்த்தி திருப்தி அடைந்துள்ளார்.

English Summary

Serena lost .. Simona Halep wins..

Latest Articles

KOLNews