KOLNews

உலக பேட்மிண்டன் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றார் சிந்து..!

பாசெல், சுவிட்சர்லாந்தின் பாசெல் நகரில் கடந்த ஒரு வார காலமாக நடந்து வரும் 25-வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி தங்கப்பதக்கம் வென்றுள்ளார் சிந்து.

முன்னதாக,நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் 5-ம் நிலை வீராங்கனையான இந்தியாவின் பி.வி.சிந்து, தரவரிசையில் 4-வது இடம் வகிக்கும் ஜப்பானின் நஜோமி ஒகுஹராவுடன் மோதினார்.

இதில் ஆராம்பம் முதலே ஆக்ரோஷமாக ஆடிய சிந்துவின் சில ஷாட்டுகளுக்கு ஒகுஹரா திணறியது குறிப்பிடத்தக்கது . இதே போல் வலை அருகே சென்ற பந்தை மெதுவாக தட்டி விடுவதிலும் புள்ளிகளை குவித்த சிந்து ,  முதல் செட்டை எளிதில் வசப்படுத்தினார். அதே போல 2-வது செட்டிலும் ஒகுஹராவுக்கு எந்த வாய்ப்பையும் வழங்காமல் திறமையான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

38 நிமிடங்கள் மட்டுமே நடந்த இந்த முடிவில் பி.வி.சிந்து 21-7, 21-7 என்ற நேர் செட் கணக்கில் ஒகுஹராவை தோற்கடித்தார்.

2017-ம் ஆண்டு இறுதி ஆட்டத்தில், இதே ஒகுஹராவிடம் தான் சிந்து  110 நிமிடங்கள் போராடி வீழ்ந்தார் என்பது கவனிக்கத்தக்கது.

42 ஆண்டு கால உலக பேட்மிண்டன் வரலாற்றில் இந்தியர் ஒருவர் தங்கப்பதக்கத்தைபெறுவது இதுவே முதல் முறை. சென்ற  2 ஆண்டு தொடர் தோல்வி கண்ட சிந்து, இந்த முறை தனது அபார திறமையை வெளிப்படுத்தி  தனது கனவை நனவாக்கி இருக்கிறார்.

24 வயதான சிந்து உலக பேட்மிண்டனில் வெல்லும் 5-வது பதக்கம் இதுவாகும். முன்னதாக 2013, 2014-ம் ஆண்டுகளில் வெண்கலமும், 2017, 2018-ம் ஆண்டுகளில் வெள்ளியும் வென்று இருந்தார். இதன் மூலம் உலக பேட்மிண்டனில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் அதிக பதக்கங்களை மகசூல் செய்த வீராங்கனையான முன்னாள் ஒலிம்பிக் சாம்பியன் சீனாவின் ஜாங் நிங்கின் (ஒரு தங்கம், 2 வெள்ளி, 2 வெண்கலம்) சாதனையை சிந்து சமன் செய்திருப்பது குறிப்பிடதக்கது.

இந்த வெற்றி சிந்து நிருபர்களிடம் கூறுகையில், ‘எனது தேசத்திற்காக இந்த பதக்கத்தை வென்றுள்ளேன். இந்தியராக இருப்பதில் பெருமிதம் அடைகிறேன். சென்ற இரண்டு உலக பேட்மிண்டன் இறுதி ஆட்டங்களில் தோற்று இருந்தேன். இந்த நிலைமையை இப்போது மாற்றி இருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. எனது உணர்வுகளை விவரிக்க வார்த்தைகளே இல்லை.

இந்த தருணத்திற்காகத் தான் நீண்ட காலமாக காத்திருந்தேன். ஒரு வழியாக இப்போது உலக சாம்பியன் ஆகி விட்டேன். எனது பயிற்சியாளர்கள் கிம், கோபிசந்த், உதவியாளர்கள் உள்ளிட்டோருக்கு  நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்த பதக்கத்தை எனது தாயார் விஜயாவுக்கு சமர்ப்பிக்கிறேன். அவருக்கு இன்று பிறந்த நாள். பிறந்தநாள் பரிசாக இதை வழங்குகிறேன்’ என்றார் உற்சாகத்துடன்.

 

 

 

English Summary

Sindhu wins gold medal at World Badminton Championship

Latest Articles

KOLNews