KOLNews

துப்பாக்கி சுடுதல் போட்டி..! - சாதித்த இந்திய வீராங்கனைகள்..!

டெல்லியில் நடைபெற்ற உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியின் பதக்க பட்டியலில் இந்திய அணி முதலிடத்தை பிடித்தது. 

இந்திய வீராங்கனைகள் சிங்க்கி யாதவ், மானு பக்கர், ரகி சர்னோபாத் ஆகியோர், பெண்களுக்கான 25 மீட்டர் பிஸ்டல் குழு பிரிவில் 17-க்கு 7 என்ற புள்ளிகள் கணக்கில் போலாந்து குழுவைவீழ்த்தியதன் மூலம்  தங்கப் பதக்கம் வென்றனர்.

மேலும்,  இந்திய வீராங்கனைகள் அஞ்சும், ஸ்ரேயா சக்சேனா, காயத்ரி நித்தியானந்தம்பெண்களுக்கான 50 மீட்டர் ரைபிள் மூன்று வடிவிலான குழு பிரிவு இறுதி ஆட்டத்தில்  43-க்கு 47 என்ற புள்ளிகள் கணக்கில் போலாந்து அணியிடம் தோல்வி அடைந்தனர்  இதனால் அவர்கள் வெள்ளிப் பதக்கத்தை வென்றனர்.

இதன் மூலம் பதக்க பட்டியலில் 10 தங்கம், 6 வெள்ளி, 5 வெண்கலம் உள்பட 21 பதக்கங்களை வென்று இந்திய அணி முதலிடத்துக்கு முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

English Summary

Sniper competition ..! - Achieved Indians ..!

Latest Articles

KOLNews