KOLNews

விராத் கோஹ்லிக்கு உறுதுணையாக இருப்பேன்...! - புதிய பி.சி.சி.ஐ., தலைவர் கங்குலி

சூதாட்ட சர்ச்சை (6வது ஐபில் ) காரணமாக இந்திய கிரிக்கெட் போர்டை (பி.சி.சி.ஐ.,) நிர்வகிக்க வினோத் ராய் தலைமையில் கிரிக்கெட் நிர்வாகக்குழு (சி.ஒ.ஏ.,) அமைக்கப்பட்டதையடுத்து இந்தியா முழுவதும் உள்ள மாநில கிரிக்கெட் சங்கங்களில் பல மாற்றங்கள் செய்யப்பட்டன. 

அதன் தொடர்ச்சியாக,புதிய விதிகளின் படி நடந்த தேர்தலில் பி.சி.சி.ஐ., தலைவராக, இந்திய அணி முன்னாள் கேப்டன் கங்குலி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். 

அதன் பின், இன்று (அக்.,23) ஆண்டு பொதுக்குழு கூட்டம் நடந்தது. இதில் பி.சி.சி.ஐ.,யின் 39வது தலைவராக கங்குலி முறைப்படி பதவி ஏற்றார். இதையடுத்து 33 மாதங்களாக நீடித்து வந்த சி.ஒ.ஏ.,யின் கட்டுப்பாடு தற்போது முடிவுக்கு வந்துள்ளது 

பதவியேற்புக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த கங்குலி, அவர்களிடம் பேசுகையில், 

"இந்திய கிரிக்கெட் போர்டில் எல்லோரும் சமம் தான். இந்த நம்பிக்கையில் சமரசம் என்பதே கிடையாது. ஊழலுக்கு இடமில்லை. இந்திய அணியை வழிநடத்தியது போல, பி.சி.சி.ஐ.,யை சிறப்பாக நிர்வகிப்பேன். அனைவருக்கும் உரிய மரியாதை அளிக்கப்படும். தோனியின் எதிர்காலம் குறித்து இதுவரை அவரிடம் பேசவில்லை. சாம்பியன்கள் விரைவில் ஓய்வு பெற்று விட மாட்டார்கள். இந்திய அணியை வித்தியாசமான வழியில் கொண்டு செல்லும் விராத் கோஹ்லிக்கு உறுதுணையாக இருப்பேன். 

என கங்குலி தெரிவித்தார்.

English Summary

Stand with Virat Kohli ... - New BCCI Chairman Ganguly

Latest Articles

KOLNews