KOLNews

இங்கு கொரோனாவுக்கு இடமில்லை..! - சூப்பராய் தயாரான ஒலிம்பிக் கிராமம்

நான்கு வருடங்களுக்கு ஒரு முறை நடத்தப்படும் ஒலிம்பிக் போட்டிகள், கடந்த 2020இல் நடைபெறவிருந்த நிலையில்,  கொரோனா தொற்று காரணமாக தள்ளி வைக்கப்பட்டு இந்த ஆண்டு ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற இருக்கிறது .

அதனையடுத்து, அங்கு  கொரோனா தொற்றை எதிர்கொள்ளும் விதமாக அனைத்து வசதிகளுடன் கூடிய ஒலிம்பிக் கிராமம் ஒன்று பிரத்யேகமாக உருவாக்கப்பட்டிருக்கிறது . பலரின் கவனத்தை ஈர்த்து வரும் இது, பல்வேறு பாதுகாப்பு அம்சங்களை உள்ளடக்கிய ஒன்றாக உருவாகியுள்ளது. 

இந்நிலையில், இந்த ஒலிம்பிக் கிராமம் பரிசோதனை செய்யப்பட்ட வீரர்களுக்கான பாதுகாப்பு வளையமாக செயல்படுவதோடு . போட்டியில் கலந்து கொள்ள உள்ள 206 நாடுகளைச் சேர்ந்த 11000 விளையாட்டு வீரர்கள்  இந்த ஒலிம்பிக் கிராமத்தை விட்டு வெளியே செல்லும் சூழல் வந்தாலும் அவர்கள் தினமும் பரிசோதனை செய்யப்படுவார்கள் என்றும் ஒலிம்பிக் கிராமத்தில் குடியிருப்பவர்களில் 80 சதவீதம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாகவும் சர்வதேச ஒலிம்பிக் குழு தெரிவித்திருக்கிறது . 

அத்துடன் இன்று திறக்கப்பட்டுள்ள இக்கிராமத்திற்கு தற்போது  வீரர்கள் வரத்தொடங்கியுள்ளார்கள். இதற்கிடையே இந்தியா சார்பாக ஒலிம்பிக்கில் கலந்து கொள்ளும் 115 வீரர் வீராங்கனைகளும் நாளை ( ஜூலை 14 ) டோக்கியோ கிளம்புகிறார்கள். 

English Summary

There is no place for Corona here ..! - Superb Olympic Village got ready

Latest Articles

KOLNews