KOLNews

ஒலிம்பிக்கில் கபடி விளையாட்டை சேர்க்க முயற்சி..! - மத்திய மந்திரி கிரண் ரிஜிஜு தகவல்

உடலுக்கு உறுதியும், மனதிற்கு புத்துணர்ச்சியும் தரும் விளையாட்டுகளில் 'கபடி' விளையாட்டு முக்கியமான ஒன்று. இந்தியாவெங்கும் கிராமப்புறங்களிலிருந்து நகரங்கள் வரும் விளையாடப்படும் இவ்விளையாட்டு கடந்த 30 வருடங்களில் கொஞ்சம் குறைந்து போனது உண்மை தான். 

தேசிய அளவில் போட்டிகள் பல நடைபெற்றாலும் அதை விளையாடுவோர் எண்ணிக்கை குறைந்து போனது.. ஆனால் சமீபத்திய வருடங்களில் இப்போட்டிகளை தனியார் நிறுவனங்கள் 'ஸ்பான்சர்' செய்தும், தனியார் தொலைக்காட்சிகளில் அவை அதிகம் ஒளிபரப்பட்டதையும் அடுத்து தற்போது இளைஞர்களுக்கு இதன் மீதான ஆர்வம் பெருகி வருகிறது.  

Image result for Central Minister Kiran Rijiju Information

இந்நிலையில், வரும் பாரிஸ் ஒலிம்பிக்கில் கபடி விளையாட்டை சேர்க்க முயற்சி எடுப்போம்,'' என மத்திய விளையாட்டு அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார் 

தற்போதைய நிலையில், உலக அரங்கில் கபடி விளையாட்டில் இந்தியா ஆதிக்கம் செலுத்துகிறது. ஆசிய விளையாட்டில் இந்தியா 7 தங்கம் வென்றது. இப்போட்டியை வரும் 2024, பாரிஸ் ஒலிம்பிக்கில் சேர்க்க முயற்சி நடப்பதாக தெரிகிறது.

இது தொடர்பாக மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு கூறுகையில்,

'' உள்நாட்டில் விளையாட்டு எந்தளவுக்கு வேகமாக வளர்ந்து வருகிறது என்பதற்கு கபடி சிறந்த எடுத்துக்காட்டு. நாங்கள் நினைத்த விளையாட்டு கலாசாரத்தின் துவக்கம் இது தான். தற்போது இது நிஜமாகி வருகிறது. அடுத்த ஒலிம்பிக்கில் எப்படியும் கபடி இடம் பெறச் செய்ய தேவையான அனைத்து முயற்சிகளும் எடுக்கப்படும். நானும் இதில் உறுதியாக உள்ளேன்,'' என்றார்.

இந்நிலையில், அமைச்சரின் இந்த பேச்சு கபடி விளையாட்டு  வீரர்களுக்கு புது புத்துணர்ச்சியை கொடுக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

English Summary

Trying to add Kabaddi to the Olympics ..! - Central Minister Kiran Rijiju Information

Latest Articles

KOLNews