KOLNews

விராட் கோலி விளையாடணுமாம்..ஆனால், ரன் எடுக்கக்கூடாதாம் ..! - டிம் பெய்ன்னின் ஆசை..!

ஆஸ்திரேலியா. விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, 3 ஒரு நாள், மூன்று 20 ஓவர் மற்றும் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக  ஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ள நிலையில்,

ஆஸ்திரேலிய டெஸ்ட் கேப்டன் டிம் பெய்ன், ஊடகம் ஒன்றிற்கு அளித்த  பேட்டி ஒன்றில் பின்வருமாறு தெரிவித்துள்ளார் -

என்னிடம் விராட் கோலி பற்றி அதிக கேள்வி கேட்கிறார்கள். என்னை பொறுத்தவரை அவரும் மற்றொரு வீரர் தான். மற்றபடி அவரைப் பற்றி கவலைப்படுவதற்கு எதுவும் இல்லை. உண்மையை சொல்ல வேண்டும் என்றால் அவருடன் எனக்கு நட்பு என்பெதெல்லாம்  கிடையாது. ‘டாஸ்’ போடும் போது அவரை பார்க்கிறேன். அதன் பிறகு அவருக்கு எதிராக விளையாடுகிறேன். அவ்வளவு தான். .விராட் கோலி குறித்து ஒரு வேடிக்கையான விஷயம் என்னவென்றால் அவரை நாங்கள் வெறுக்க விரும்புகிறோம். அதே சமயம் கிரிக்கெட் ரசிகர்களாக அவரது பேட்டிங்கை பார்க்க விரும்புகிறோம். இந்த மாதிரி இருவிதமான எண்ணங்கள் எங்களிடம்  உண்டு. அவரது பேட்டிங்கை பார்க்க பிடிக்கும் அதே நேரத்தில், அவர் அதிகமான ரன்கள் அடிப்பதை பார்க்க விரும்புவதில்லை. விராட் கோலி கடும் சவால் அளிக்கக்கூடிய ஒரு வீரர். நானும் அப்படி தான். சில நேரங்களில் நாங்கள் இருவரும் வார்த்தை போரில் ஈடுபட்டிருக்கிறோம். அவரும் கேப்டன், நானும் கேப்டன் என்பதால் மட்டும் இது நடக்கவில்லை. வீரராக இருந்திருந்தாலும் இது நடந்திருக்கும்.

விராட் கோலி மாதிரியான உலகின் மிகச்சிறந்த வீரருக்கு எதிராக விளையாடும் போது கொஞ்சம் பதற்றம் இருக்கும். அவரை வீழ்த்த எல்லாவகையிலும் போராட்டம் தீவிரமாகும். இதே போல் இங்கிலாந்து அணியில் ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ் களத்தில் நிற்கும் போதும் இத்தகைய டென்ஷன் இருக்கும். சென்ற முறை இந்திய அணி இங்கு எங்களை டெஸ்ட் தொடரில் தோற்கடித்தது. ஆனால் அப்போது இருந்த ஆஸ்திரேலிய அணி வேறு. எந்த நேரத்திலும், சிறந்த அணிக்கு எதிராக விளையாடும் போது தான் உங்களது முழு திறமையை சோதித்து பார்க்க முடியும். அதை ஒரு வீராகவும், அணியாகவும் செய்யும் ஆவலில் உள்ளோம்.

என தெரிவித்துள்ளார்  டிம் பெய்ன்.

English Summary

Virat Kohli wants to play..but he should not run ..! - Tim Paine's wish ..!

Latest Articles

KOLNews