KOLNews

என்ன..ஒரு மேட்ச்..! வென்றது கிரிக்கெட்.. இங்கிலாந்து சாம்பியன்..!

நேற்று நடைபெற்ற உலகக் கோப்பைக்கான இறுதி ஆட்டத்தில் நியூஸிலாந்தை வீழ்த்தி முதன்முறையாக உலகக் கோப்பையை இங்கிலாந்து வென்று புதிய சாதனையை படைத்தது.

முன்னதாக லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் முதலில் விளையாடிய நியூஸிலாந்து அணி 8 விக்கெட் இழப்புக்கு 241 ரன்களை சேர்த்தது. பின்னர் ஆடிய இங்கிலாந்து 50 ஓவர்களில் 241 ரன்களுக்கு ஆல் அவுட்டான நிலையில் ஆட்டம் சமனில் முடிந்தது.

இதையடுத்து, சூப்பர் ஓவர் முறை கடைப்பிடிக்கப்பட்டது. அதில் முதலில் விளையாடிய இங்கிலாந்து 15 ரன்களை சேர்த்தது. பின்னர் விளையாடிய நியூஸிலாந்தும் 15 ரன்களே எடுத்ததால், சூப்பர் ஓவரும் சமனில் முடிந்தது. இதையடுத்து, இந்த ஆட்டத்தில் 6 பவுண்டரிகள் அதிகமாக விளாசியதன் அடிப்படையில் இங்கிலாந்து வென்று கோப்பையைக் கைப்பற்றியது.

இந்த வெற்றியின் மூலம் தங்களது 44 ஆண்டு கால கனவை நனவாக்கியது மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணி. 2015 உலகக் கோப்பை போட்டியைப் போலவே 2019 இறுதி ஆட்டத்திலும் 2-ஆம் இடத்தையே பெற்று தோல்வியடைந்தது நியூஸிலாந்து.

கிரிக்கெட்டை கண்டுபிடித்த நாடு என கூறப்படும் இங்கிலாந்து சொந்த மண்ணிலேயே பட்டத்தை வென்றது,இங்கிலாந்து ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

English Summary

What a Match ..! Cricket won .. England champion ..!

Latest Articles

KOLNews