KOLNews

ஏன் தோனிக்கு இப்படி ஆச்சு..? - காரணத்தை கூறிய சரந்தீப் சிங்..!

இந்தியாவிற்கு, மூன்று உலக கோப்பைகளை  வென்று கொடுத்த  முதல் கேப்டனான  தோனி, கடந்தாண்டு ஆகஸ்ட் 15 ம் தேதி சரியாக இரவு 7.29 மணிக்கு தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இட்ட பதிவின் மூலம் தான் சர்வதேசக் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து விடைபெறுவதாக அறிவித்தார். 

அதன் பின், ரசிகர்களின் ஏகோபித்த நாயகனான தோனிக்கு ஃபேரவெல் போட்டி கூட வைக்காமல் வழி அனுப்புவதா என பிசிசிஐ மீது விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. இருப்பினும் ஃபேரவெல் போட்டி நடத்தாதற்கான காரணமும் இது வரை தெரியாமலேயே இருந்து வந்தது.

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் தேர்வாளர் சரந்தீப் சிங், அதற்கான காரணத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

அதாவது, தோனிக்கு ஃபேரவெல் போட்டி நடைபெறாததற்கு  காரணம்  கடந்தாண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெறவிருந்த டி 20 உலகக்கோப்பை தொடர் தான் என்றும்,  இந்த தொடர் ஒத்திவைத்த உடனேயே தோனி தனது ஓய்வை அறிவித்து விட்டார் ஒருவேளை டி 20 உலகக்கோப்பை தொடர் நடைபெற்றிருந்தால் , தோனி நிச்சயம் அதில் பங்கு பெற்று , ஃபேரவெல் போட்டியில் விளையாடியிருப்பார், என தெரிவித்துள்ளார்.

English Summary

Why this happend to Dhoni ? - Sarandeep Singh said the reason ..!

Latest Articles

KOLNews