KOLNews

விம்பிள்டன் : 4-வது சுற்றுக்கு செல்லும் ரபெல் நடால், செரீனா வில்லியம்ஸ்

லண்டனில்  நடந்து வரும் விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவு 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் பிரெஞ்ச் ஓபன் சாம்பியனும், நம்பர் ஒன் வீராங்கனையுமான ஆஷ்லிக் பார்டி (ஆஸ்திரேலியா) 6-1, 6-1 என்ற நேர்செட்டில் 132-ம் நிலை வீராங்கனையான ஹார்ரிட் டார்டை (இங்கிலாந்து) எளிதில் தோற்கடித்து 4-வது சுற்றுக்கு முன்னேறினார்.

அதே போல், மற்றொரு ஆட்டத்தில் 7 முறை விம்பிள்டன் பட்டம் வென்றவரும், முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையுமான செரீனா வில்லியம்ஸ் (அமெரிக்கா) 6-3, 6-4 என்ற நேர்செட்டில் தரவரிசையில் 17-வது இடத்தில் இருக்கும் ஜூலியா ஜார்சை (ஜெர்மனி) வீழ்த்தி 4-வது சுற்றுக்குள் நுழைந்தார். 

இன்னொரு ஆட்டத்தில் 2 முறை விம்பிள்டன் பட்டம் வென்ற கிவிடோவா (செக் குடியரசு) 6-3, 6-2 என்ற நேர்செட்டில் 75-வது நிலை வீராங்கனையான மாக்டா லின்னெட்டை (போலந்து) வீழ்த்தி 4-வது சுற்றுக்குள் அடியெடுத்து வைத்தார். மற்ற ஆட்டங்களில் ஜோஹன்னா கோன்டா (இங்கிலாந்து) பார்போரோ ஸ்டிரிகோவா (செக்குடியரசு), அலிசன் ரிஸ்க் (அமெரிக்கா), எலிசி மெர்டென்ஸ் (பெல்ஜியம்), கார்லா சுவாரஸ் நவரோவா (ஸ்பெயின்) ஆகியோர் வெற்றி பெற்று 4-வது சுற்றுக்கு தகுதி பெற்றனர்.

Image result for Wimbledon: Rafael Nadal and Serena Williams heading into the 4th round

ஆண்கள் ஒற்றையர் பிரிவில் 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் 2 முறை விம்பிள்டன் பட்டம் வென்றவரும், உலக தரவரிசையில் 2-வது இடத்தில் இருப்பவருமான ஸ்பெயின் வீரர் ரபெல் நடால் 6-2, 6-3, 6-2 என்ற நேர்செட்டில் தரவரிசையில் 72-வது இடத்தில் உள்ள பிரான்ஸ் வீரர் சோங்காவை எளிதில் தோற்கடித்து 4-வது சுற்றுக்கு முன்னேறினார்.

கலப்பு இரட்டையர் பிரிவில் 2-வது சுற்று ஆட்டங்களில் திவிஜ் சரண் (இந்தியா)-யிங் யிங் டுன் (சீனா) ஜோடி, ரோகன் போபண்ணா (இந்தியா)-சபலென்கா (பெலாரஸ்) இணை தோல்வி கண்டு வெளியேறியது குறிப்பிடத்தக்கது.

English Summary

Wimbledon: Rafael Nadal and Serena Williams heading into the 4th round

Latest Articles

KOLNews