KOLNews

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் - 4வது நாளும் மழையால் தடை..!

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில்,  இந்தியாவுக்கும் நியூசிலாந்திற்கும் இடையிலான போட்டியின் நான்காவது நாளிலும் மழை காரணமாக முற்றிலும் ஆட்டம் தடைப்பட்டுள்ளது . சவுத்தாம்ப்டன் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த  போட்டியின் நான்காவது நாளில் தொடர்ச்சியாக 5 மணி நேரம் மழை பெய்ததை அடுத்து நடுவர்கள் இன்றைய ஆட்டத்தை ரத்து செய்துள்ளனர் . 

கடந்த  ஜூன் 18 ஆம் தொடங்கிய இந்த போட்டியின் முதல் நாள் மழை காரணமாக முற்றிலுமாக தடைபட்டது . டாஸ் போடக்கூட இரண்டு அணிகள் கேப்டன் களத்திற்கு வர முடியவில்லை . டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டி நடைபெற்ற நான்கு நாட்களும் மோசமான வானிலை , மழை மற்றும் போதிய வெளிச்சம் இல்லாததால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது . 

இந்நிலையில், ரிசர்வ் டே அன்று போட்டி நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது 

English Summary

World Test Championship series - 4th day stopped due to rain ..!

Latest Articles

KOLNews