KOLNews

உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் போட்டி..! மூன்றாம் நாள் ஆட்டத்தில் நடந்தது என்ன.?

கடந்த 18 - ந் தேதி இங்கிலாந்தில் உள்ள சவுத்தாம்ப்டனில் துவங்கிய முதலாவது உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் போட்டியின்,  இறுதி ஆட்டத்தில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் இடையிலான போட்டி தொடங்கியது . இருப்பினும் மழை காரணமாக முதல் நாள் ஆட்டம் ரத்து செய்யப்பட்டது . 

அதன் பின், நேற்று முன்தினம் 2 - வது நாள் ஆட்டம் நடைபெற்றது . டாஸ் வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் பந்து வீச்சை தேர்வு செய்தார் . அதன்படி , முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 145 ரன்கள் எடுத்திருந்து , 

இந்நிலையில், இந்தியா 207 ரன் இலக்கு நேற்று மூன்றாம் நாள் ஆட்டம் தொடங்கியது . ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் விராட் கோலி 44 ரன்களில் ஆட்டமிழந்தார் , அடுத்து வந்த ரிஷப் பண்ட் 4 ரன்களில் வெளியேறினார். அஸ்வினும் 2 ரன்களில் வெளியேறினார் . அதன் பின் நடுவரிசை பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து வெளியேற, இறுதியில் , இந்திய அணி 92.1 ஓவர்களில் 217 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது . 

இதில், இந்திய அணியில் அதிகபட்சமாக ரகானே 49 ரன்கள் அடித்தார் . நியூசிலாந்து அணி சார்பில் கைல் ஜேமிசன் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார் . இதையடுத்து , நியூசிலாந்து அணி தனது முதல் இன்னிங்சை தொடங்கியது . தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கிய டாம் லாதம் , டிவான் கான்வே இருவரும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர் . கான்வே 54 ரன்கள் எடுத்திருந்த போது இஷாந்த் சர்மாவிடம் அவுட்டானார் . அதன்பின் போதிய வெளிச்சமின்மையால் ஆட்டம் முடித்துக் கொள்ளப்பட்டது . இறுதியில் , மூன்றாம் நாள் முடிவில் நியூசிலாந்து அணி 2 விக்கெட் இழப்புக்கு 101 ரன்கள் எடுத்துள்ளது . இந்தியா சார்பில் அஷ்வின் , இஷாந்த் தலா ஒரு விக்கெட் எடுத்துள்ளனர் . 

நான்காவது நாள் ஆட்டம் இன்று பிற்பகல் 3 மணிக்கு தொடங்குகிறது . 

English Summary

World Test Cricket Championship ..! What happened in the third day match.?

Latest Articles

KOLNews