KOLNews

இருந்தாலும்..நீங்க ரொம்ப 'ஸ்லொ' ! - இந்திய அணியின் 80 சத சம்பளம் போச்சு..!

இன்று, நியூஸிலாந்து, இந்தியா அணிகளுக்கிடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் ஆட்டம் ஹாமில்டனில் நடைபெற்றது. 

இதில், நியூஸிலாந்து அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்நிலையில் ஐசிசி, இந்திய அணி குறிப்பிட்ட நேரத்துக்குள் 4 ஓவர்கள் குறைவாக வீசியதாக குற்றம்சாட்டியதுடன் , அதற்கு இந்திய கிரிக்கெட் வீரர்களின் போட்டி ஊதியத்திலிருந்து 80 சதவீதத்தை அபராதமாக விதித்துள்ளது.

அத்துடன்,  இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி மேற்கண்ட இந்தத் தவறை ஒப்புக்கொண்டதால் இதுகுறித்து முறையான விசாரணை நடத்துவதற்கான அவசியம் ஏற்படவில்லை என ஐசிசி தெரிவித்துள்ளது. 

ஏற்கனவே, நியூஸிலாந்துக்கு எதிராக பிப்ரவரி 1-ஆம் தேதி நடைபெற்ற 4-வது டி20 மற்றும் பிப்ரவரி 3-ஆம் தேதி நடைபெற்ற 5-வது டி20 ஆட்டங்களிலும் மெதுவாகப் பந்துவீசியதால் இந்திய அணிக்கு போட்டி ஊதியத்தில் இருந்து முறையே 40 மற்றும் 20 சதவீதத் தொகை அபராதமாக விதிக்கப்பட்டது நினைவிருக்கலாம்.

English Summary

You are so 'Slow' ! Indian team has to pay 80% of salary

Latest Articles

KOLNews