கடந்த 2014-ம் ஆண்டு முதல் 2018-ம் ஆண்டு வரை, இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் 125 மீன்பிடி படகுகள் மற்றும் 17 நாட்டுப் படகுகள் இலங்கை கடற்படை முகாம்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், கடந்த 2020-ம் ஆண்டு இலங்கை அரசு இப்படகுகள் 5 ஆண்டுகளாக முகாம்களில் வைக்கப்பட்டிருப்பதால், உள்ளூர் மீனவர்களுக்கு இடையூறு ஏற்படுவதாகவும், இதனால் படகுகளை ஏலம் விடப்போவதாகவும் அறிவித்தது.
அதையடுத்து, இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி, படகுகளை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்திருந்தது. இந்த சூழ்நிலையில், இலங்கை அரசிடமிருந்த தமிழக மீன்பிடி படகுகளை வரும் பிப்ரவரி மாதம் 7-ம் தேதி முதல் ஏலம் விடப்படும் என்றும், 10-ம் தேதி வரை ஏலம் நடைபெறும் என்றும் இலங்கை அரசு தெரிவித்துள்ளது.
இலங்கை அரசின் இந்த அறிவிப்பால் படகுகளை எப்படியாவது மீட்டுவிடலாம் என்றிருந்த மீனவர்கள் பெருத்த ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
English Summary
105 boats of Tamil Nadu fishermen decided to be auctioned ..! - Government of Sri Lanka decision.!