KOLNews

144... உங்கள் மனதுக்கு அல்ல..! - ஆதலினால் கற்பனை செய்வீர்..!

அடுத்த 21 நாட்களுக்கு அரசாங்கம் 144 சட்டத்தை அமல் படுத்தி விட்டது. அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதை தவிர்த்து வெளியில் இயங்கும் செல்வதற்கு நமக்கு வாய்ப்பு இல்லை. வீட்டிலேயே இருக்கவேண்டும். முதல் ஒரு சில நாட்கள் எளிதாக கடந்து விடும்.  டிவி பார்க்கலாம்.. குடும்பத்தினருடன் அரட்டை அடிக்கலாம். வாட்ஸ் அப் .முகநூல் என கொஞ்சம் பொழுதை கழிக்கலாம்.

எவ்வளவு நேரம் இதை செய்ய முடியும்.? அத்துடன் எதைத் திறந்தாலும் கொரனா வைரஸ் பற்றிய செய்திகள் வந்த வண்ணம் இருக்கும்..

இந்த நேரத்தில் நீங்கள் மனதை ரிலாக்ஸ் செய்து கொள்ளுங்கள்.. இந்த 21 நாட்கள் நன்றாக ஓய்வு எடுத்து உங்கள் வாழ்க்கையின் அடுத்த இலட்சியத்திற்காக அதை கற்பனை செய்யுங்கள். 

சும்மாக செய்வதுதானே..!  கற்பனை செய்வதற்கு காசு வேண்டும் என்ன? 

இன்று நாம் அனுபவித்துக் கொண்டிருக்கிற விஞ்ஞான கண்டுபிடிப்புகள் அனைத்துமே ஒரு காலத்தில் மனிதனின் கற்பனையாக இருந்தது தான்.  இன்றைய மின்சார விளக்கு எடிசனின் கற்பனை. தொலைபேசி கிரகாம் பெல்லின் கற்பனை. டிவி, சினிமா, ஏசி, கார், விமானம்  என இன்றைய அணைத்து நிஜங்களுமே  அன்றைய கற்பனைகள் தான்.

Image result for imagination

அதற்காக ஒன்றை புதியதாக கண்டுபிடிக்கும் விஞ்ஞானியாக நீங்கள் மாற வேண்டிய அவசியம் இல்லை. உங்களுக்கான வாழ்க்கையில், உங்களுக்கு தெரிந்தவற்றை கொண்டு அடுத்த உயரத்திற்கு செல்ல கற்பனை செய்யுங்கள்.

Image result for creative thinking images

தாகத்துக்கு தண்ணீர் கிடைக்காமல் மர பிசினை வாயில் வைத்தவனுக்கு சுயிங்கம் பற்றிய கற்பனை பிறந்தது, சிலந்தி வலையை பார்த்த கேப்டன் ப்ரவுனுக்கு தொங்கும் பாலம் அமைப்பது பற்றிய கற்பனை பிறந்தது.. மரத்தை ஒரு புழு குடைந்து சென்று ..அதைப் பார்த்ததும் இசாம்ப்ர்ட் ப்ருன்ஸ் என்பவனுக்கு தேம்ஸ் நதியின் கீழே பாதை அமைக்க வேண்டும் என்ற கற்பனை பிறந்தது. இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். 

இவற்றிலிருந்து  நீங்கள் புரிந்து கொள்ள வேண்டியது,  கற்பனையின் சக்திக்கு அளவு இல்லை, கற்பனை என்பதில் எதிர்காலத்தை நிகழ் காலத்திலேயே உருவாக்குகின்ற ஒரு செயல் என்பது தான். 

Image result for imagining future

இதற்கான கால அவகாசம் இப்போது கிடைத்திருக்கிறது என்று நினைத்து,இந்த முடங்கிய நாளில் எதிர்காலத்தை , அல்லது உங்களுக்கு பிடித்த விஷயங்களை கற்பனை செய்தால், இந்த நாட்கள் முடக்கிய நாட்களாக கடந்து போகாது.

English Summary

144 not to your mind ..! - So you imagine ..!

Latest Articles

KOLNews