KOLNews

மாடு பிடி வீரர்களுக்கு 2 டோஸ் கொரோனா தடுப்பூசி கட்டாயம் ..! - ஜல்லிக்கட்டு கட்டுப்பாடுகள்

தமிழர்களின் அடையாளங்களில் ஒன்றான ஜல்லிக்கட்டு போட்டி, இந்த பொங்கல் பண்டிகையொட்டி நடைபெறவுள்ள நிலையில், கொரோனா தாக்கம் காரணமாக அதற்கு பல வித கட்டுபாடுகளை அரசு விதித்திருக்கிறது. 

குறிப்பாக,  ஜல்லிக்கட்டு போட்டிகளில் 150 பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும், அதாவது ஜல்லிக்கட்டு போட்டிகளை காண உள்ளுர் மக்களுக்கு மட்டுமே அனுமதி.அதே போல, ஜல்லிக்கட்டில் பங்குபெறும் வீரர்களுக்கு 2 டோஸ் கொரோனா தடுப்பூசி சான்று கட்டாயம் : காளையின் உரிமையாளர் மற்றும் உதவியாளர் ஒருவருக்கு மட்டுமே அனுமதி

Covid Vaccine and Allergies: What You Should Know – Cleveland Clinicமுன்னதாக ஜல்லிக்கட்டு போட்டிகள் தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டது . அதன்படி, ஜல்லிக்கட்டு போட்டிகளில் காளைகளுடன் அதன் உரிமையாளர் மற்றும் நன்கு பழக்கமுள்ள ஒரு உதவியாளர் மட்டுமே பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.  மேலும், அவர்கள் இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழ் மற்றும் போட்டி நடைபெறும் நாளில் இருந்து இரு நாட்களுக்கு முன்பு எடுக்கப்பட்ட கொரோனா இல்லா சான்றிதழுடன் வர வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்க வருவோருக்கு வழங்கப்படும் அடையாள அட்டை இல்லாத நபர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் எனவும், காளைகளை பதிவு செய்யும் போது, அதன் உரிமையாளர் மற்றும் உதவியாளர் ஆகியோரின் பெயர்களும் கட்டாயம் பதிவு செய்திருக்க வேண்டுமென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Jallikattu cheat sheet: 10 things you should know about the bull-taming  sport - The Economic Times

ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு, வடமாடு நிகழ்ச்சிகளில் மாடுபிடி வீரர்கள் 300 பேர் மட்டுமே பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதேசமயம் எருதுவிடும் நிகழ்ச்சியில் 150 வீரர்கள் மட்டுமே பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. வெளியூர்களில் வசிப்பவர்கள் போட்டியினை தொலைக்காட்சி அல்லது இணையதளம் வாயிலாக காண அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஜல்லிக்கட்டு போட்டியினை காண வரும் பார்வையாளர்களும், இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டதற்கான சான்றிதழ் அல்லது கொரோனா இல்லா சான்றிதழ் கொண்டு வர வேண்டுமென்றும் கூறப்பட்டுள்ளது. 

English Summary

2 dose of corona vaccine is mandatory for Participants ..! - Jallikkattu controls

Latest Articles

KOLNews