KOLNews

ஆஸ்திரேலியாவிலிருந்து மீண்டு(ம்) தமிழகம் வரும் 700 ஆண்டுகள் பழமையான 'நடராஜர்' சிலை..!

1982ம் ஆண்டில் காணாமல் போன நடராஜர் சிலை தெற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள அருங்காட்சியகத்திலிருந்து மீட்கப்பட்டு சென்னைக்கு கொண்டு வரப்பட உள்ளது.

முன்னதாக நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சி குலசேகரமுடையார் அறம்வளர்த்த நாயகி கோயிலில் 1982ம் ஆண்டில் நடராஜர் , சிவகாமி உள்ளிட்ட 4 சிலைகள் மாயமாகிது.

அவற்றில், நடராஜர் சிலை, 37 ஆண்டுகளுக்கு முன் மாயமானது. 700 ஆண்டுகள் பழமையான இந்த பஞ்சலோக நடராஜர் சிலையின் தற்போதைய மதிப்பு ரூ 30 கோடி என தெரிகிறது.

Image result for pon manickavel

இந்நிலையில், சிலை தடுப்பு பிரிவு ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் தலைமையிலான சிலை தடுப்பு பிரிவு , சிலை  தற்போது ஆஸ்திரேலியாவில் இருப்பதை கண்டறிந்தனர்.

கடந்த 2001ம் ஆண்டில், தெற்கு ஆஸ்திரேலியாவின் அருங்காட்சியகம்  75.7 செ.மீ., உயரமுள்ள நடராஜர் சிலையை ஓலிவர் போர்ஜ் அன்ட் பெரன்டன் லிங்க் நிறுவனத்திடம் வாங்கியிருந்தது. தமிழகத்திற்கு சொந்தமான இந்த சிலையை மீட்க சிலை தடுப்பு பிரிவு ஐ.ஜி., பொன். மாணிக்க வேல் தலைமையில் முயற்சி எடுக்கப்பட்டது. இந்த சிலை தமிழகத்தை சேர்ந்தது என்றும் இது குறித்து உரிய ஆவணங்களை ஆஸ்திரேலியாவில் உள்ள அருங்காட்சியகத்தில் தமிழக காவல் துறையினர் ஒப்படைத்தனர்.

அதையடுத்து இந்த நடராஜர் சிலையை தமிழக அரசிடம் ஒப்படைக்க ஏ.ஜி.எஸ்.ஏ., நிறுவனம் ஒப்புதல் கொடுத்துள்ளது.

இதையடுத்து,இந்த சிலை இன்னும் ஓரிரு நாளில் டில்லிக்கு அனுப்பிவைக்கப்பட உள்ளது

இந்நிலையில் டில்லி கொண்டு வரப்பட்ட நடராஜர் சிலை, விரைவு ரயில் மூலம் செப்.,13ல் சென்னை கொணடு வரப்பட உள்ளதாக தெரிகிறது.

English Summary

700-year-old statue of Natarajar returned from Australia

Latest Articles

KOLNews