KOLNews

7.5 சதவீத உள்ஒதுக்கீடு..! - அரசாணை தெரிவிப்பது என்ன ..?

நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற அரசு பள்ளி மாணவர்கள் மருத்துவ படிப்பில் சேருவதற்கு ஏதுவாக 7.5 சதவீத உள் ஒதுக்கீடு சட்ட மசோதா ஆளுநரின் ஒப்புதலுக்காக  காத்திருக்கும் நிலையில் , தமிழக அரசு , அரசமைப்புச் சட்டம் 162 ன் படி தனக்கான அதிகாரத்தை பயன்படுத்தி  அரசாணை ஒன்றை பிறப்பித்துள்ளது 

அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது -

அரசுப் பள்ளியில் 6ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையில்  படித்து  நீட் தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவ மாணவிகளுக்கு முன்னுரிமை அடிப்படையிலான 7.5 சதவீத உள் ஒதுக்கீடு அளிக்கப்படும்.  இது எம்பிபிஎஸ் ,பிடிஎஸ் மற்றும் சித்தா, ஆயுர்வேதம், யுனானி உள்ளிட்ட இந்திய மருத்துவப் படிப்புகளுக்கு பொருந்தும்.

இந்த ஒதுக்கீட்டின் கீழ் வரக்கூடிய மாணவர்களுக்கு தமிழகத்தில் ஏற்கனவே பின்பற்றப்பட்டு வரும் இட ஒதுக்கீட்டின் கொள்கையின் அடிப்படையில் (69% இட ஒதுக்கீடு) சேர்க்கை அனுமதி அளிக்கப்படும். ஊராட்சி ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள், ஆதிதிராவிடர் நலப் பள்ளிகள், நகராட்சி, மாநகராட்சி, பழங்குடியினர் நலப் பள்ளிகள், கள்ளர் சீரமைப்பு, பிற்படுத்தப்பட்டார் மிகவும் பிற்படுத்தப்பட்டோர், மாற்றுத்திறனாளிகள், சமூகப் பாதுகாப்பு துறைகளைச் சேர்ந்த பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் இந்த ஒதுக்கீட்டுக்கு தகுதி உடையவர்கள். வனம், சமூகப் பாதுகாப்புத் துறைகளைச் சேர்ந்த பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் இந்த உள் ஒதுக்கீட்டுக்கு தகுதி உடையவர்கள்.

கல்வி உரிமைச் சட்டம், கட்டாய கல்வி சட்டத்தின் கீழ் 8ஆம் வகுப்பு வரை பள்ளிகளில் படித்தாலும், 9 முதல் பிளஸ் 2 வரை கீழ் அரசு பள்ளிகளில் படித்தால், அவர்களுக்கும்  7.5 சதவீத உள் ஒதுக்கீடு கிடைக்கும் எங்கெல்லாம் நீட்தேர்வு அடிப்படைத் தகுதியாக பார்க்க படுகிறதோ அங்கெல்லாம் இந்த ஒதுக்கீடு முறை நடைமுறைப் படுத்தப்படும். அனைத்துக் கல்லூரிகளிலும் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் 7.5 சதவீத ஒதுக்கீட்டின் கீழ் மாணவர்கள் சேர்க்கப்படுவர். இந்த ஒதுக்கீட்டை தவிர்த்து பிற ஒதுக்கீட்டு இடங்களில் நடைபெறும் கலந்தாய்வில் அரசுப்பள்ளி மாணவர்கள் பங்கேற்க முடியும்.

இவ்வாறு  தனது உத்தரவில் சுகாதாரத் துறை முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 

English Summary

7.5 percent allocation ..! - What does the G.O say ..?

Latest Articles

KOLNews