KOLNews

இதுக்கும் அடிக்கலாம் ஒரு சல்யூட்..! - நெஞ்சில் ஈரத்துடன் டிஜிபி சைலேந்திரபாபு .!

கடந்த ஒரு சில வருடங்களில் அவ்வப்போது காவல் துறையை சேர்ந்தவர்களின் தற்கொலை செய்திகளை ஊடகங்கள் வாயிலாக அறிந்திருப்போம். காவலர்களுக்கு  உண்டாகும் மனஉளைச்சல், பணிச்சுமை, மேலாதிகாரிகளுடன் மனம் விட்டு பேசுவதை இருந்த உளவியல் தடைகள் போன்ற பல்வேறு சிக்கல்களும் அந்த தற்கொலைகளுக்கு ஒரு விதத்தில் காரணமாக இருக்கலாம் என சமூகவியலார்கள் பலரிடமிருந்து கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. 

இந்நிலையில் தமிழக காவல்துறையின் சட்டம் மற்றும் ஒழுங்கு டிஜிபி சி.சைலேந்திரபாபு அவர்கள், தமிழக போலீஸாருக்கு கட்டாயம் வார விடுமுறை வழங்க வேண்டும் என தற்போது உத்தரவிட்டிருப்பது, காவல்களுக்கு மட்டுமல்ல சமூகத்திற்கும் பயன் உள்ள அறிவிப்பாகும். 

 காவலர்கள் மனஉளைச்சல்களுக்கு ஆளாகாமல் இருந்தால் தானே சமூகம் அமைதியாக இருக்க முடியும்.  . குறிப்பாக இது தொடர்பாக மாநகர காவல் ஆணையர்கள் , மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் ஆகியோருக்கு டிஜிபி  அனுப்பியுள்ள  உத்தரவில், காவலர்கள் தங்கள் உடல் நலனை கவனித்து கொள்ள ஏதுவாகவும் , தங்களது குடும்பத்தாருடன் போதிய நேரம் செலவிடுவதற்கும் , வாரத்தில் ஒரு நாள் வாராந்திர ஓய்வு கட்டாயம் அளிக்கப்பட வேண்டும் . வார ஓய்வு தேவைப்படவில்லை என தெரிவிக்கும் காவலர்களுக்கும் , ஓய்வு தினத்தன்று பணியில் இருக்கும் காவலர்களுக்கும் மிகை நேர ஊதியம் வழங்கப்பட . வேண்டும் . பிறந்தநாள் வாழ்த்து : காவலர்கள் பிறந்தநாள் மற்றும் திருமண நாள்களில் அவர்களது குடும்பத்தாருடன் கொண்டாட ஏதுவாக அந்தந்த நாள்களில் அவர்களுக்கு விடுமுறை வழங்கப்பட வேண்டும் . தமிழக காவல் துறையின் சார்பில் பிறந்தநாள் மற்றும் திருமண நாள் 0 வாழ்த்துச் செய்தி , மாவட்ட மாநகர காவல் கட்டுப்பாட்டு அறையின் வாக்கிடாக்கி மூலமாக சம்பந்தப்பட்ட போலீஸாருக்கு தெரிவிக்கப்பட வேண்டும் . இந்த உத்தரவை தவறாமல் செயல்படுத்த வேண்டும் என அறிவுறுத்தியிருப்பது வரவேற்கப்பட வேண்டிய ஒன்று 

போலீசாரிடம் மனிநேயத்தை காட்டுவதின் மூலம், அதன் தாக்கம் அவர்களின் செயல்பாட்டில் வெளிப்பட்டு, அவை பொதுமக்களுக்கான சேவையில் தெரிய வரும். பொதுவாக ஐரோப்பிய போலீசார் பல்வேறு சந்தர்ப்பங்களில் பொதுமக்களிடம் நடந்து கொள்ளும் அனுசரணையான போக்கை காணொளிகளாக சமூகவலைத்தளங்களில் பார்த்து பிரமித்து வரும் நமக்கு, டி.ஜி.பி. சைலேந்திரபாபு அவர்களின் இந்த மனிதாபிமானத்துடனான அணுகுமுறை புதிய நம்பிக்கையை ஊட்டுகிறது. 

 

English Summary

A salute to this too ..! - DGP Sylendra babu with kind hearted..!

Latest Articles

KOLNews