KOLNews

கரையோர மக்களே உஷார்..! - விரைந்து நிரம்பும் வீராணம் ஏரி..!

நேற்று இரவிலிருந்து மழை விட்டு விட்டு பெய்து வரும் நிலையில், வீராணம் ஏரி வேகமாக நிரம்பி வருகிறது. இதனால் கரையோர பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

சுமார் 44 ஆயிரத்து 856 ஏக்கர் விவசாய நிலம் பாசன வசதிக்கு பயன் படும், கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவில் அருகே உள்ள  வீராணம் ஏரியின் மொத்த கொள்ளவு 47.50 அடி ஆகும். அத்துடன், சென்னை நகர மக்களுக்கு குடிநீர் தேவைக்கும் தனது பங்களிப்பை செய்து வருகிறது. இந்நிலையில், கடந்த 2 நாட்களாக அதன் சுற்று வட்டார பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவைத்தால் ஏரிக்கு நீர் வரத்து அதிகரித்தது.

இந்நிலையில், வீராணம் ஏரியை சுற்றியுள்ள கிராமங்களுக்கு சென்று  ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகள் அந்த பகுதி பொதுமக்களிடையே வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்தனர்.

அத்துடன், வீராணம் ஏரி நிரம்பி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் கரையோர பொதுமக்களை பாதுகாப்பாக தங்க வைப்பதற்காக திருமண மண்டபங்கள், முகாம்கள் தயார் நிலையில் உள்ளன. தற்போது வீராணம் ஏரியில் இருந்து சென்னை குடிநீர் தேவைக்காக ராட்சத குழாய் மூலம் 68 கன அடி தண்ணீர் அனுப்பப்பட்டு வருகிறது.

English Summary

Alert..Coastal people ..! - Veeranam Lake fills up quickly ..!

Latest Articles

KOLNews