KOLNews

அரக்கோணத்தில் அமானுஷ்யமா ..? - தானாக ஓடிய ரயிலால் பீதிக்கு உள்ளான மக்கள்..!

பொதுவாக  பேய் காட்சிகள் கொண்ட சினிமாக்களில் வாகனங்கள் தானாக ஓடுவதாக காண்பிப்பார்கள். அது போல ஒரு சம்பவம் அரக்கோணத்தில் நிகழ்ந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அரக்கோணம் ரெயில் நிலையத்திற்கு சென்னையிலிருந்து சென்ற புறநகர் ரெயில் ஆறாவது நடைமேடையில்  நின்றிருந்த நிலையில், அது தானாக அரை கிலோ மீட்டர் தூரத்திற்கு ஓடியது. இதனை கண்ட மக்கள் பதற்றம் அடைந்தனர்.

கட்டுப்பாடின்றி தானாக நகர்ந்த அந்த  ரயிலில்,  இருந்த பயணகள் ஓட்டுனர் ரயிலை இயக்குவதாக நினைத்து அமைதியாக இருந்துள்ளனர் . ஆனால் சிறிது நேரத்தில் பலத்த சத்தம் கேட்டு, பயணிகள் எட்டிப் பார்த்தபோது , மின்சார ரெயில் செல்லாத மாற்றுப்பாதையில் ரெயில் தானாக ஓடுவது தெரிய வந்துள்ளது . இதனால் பயணிகள் அச்சம் அடைந்தனர். 

பின், ரெயிலையும் உயர் மின் இணைப்பையும் இணைக்கும் கிளிப் உடைந்தது தெரிய வந்தது. தகவலறிந்து சென்ற ரயில்வே உயரதிகாரிகள் திடீரென ரயில் நகர்ந்தது எப்படி என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் . மின் இணைப்பு இல்லாத தண்டவாளத்தில் மின்சார ரெயில் சென்ற நிலையில், அதிகாரிகள் 2 மணி நேரம் போராடி அதனை மீண்டும் ரயில் 6 ஆவது நடைமேடைக்கு கொண்டுவந்தனர் 

English Summary

Arakkonam People panicked by the train that ran automatically ..!

Latest Articles

KOLNews