கடந்த 3ஆம் தேதி, தமிழ்நாடு தேர்வாணை குழுமம் (TNPSC ) , சென்னை வருவாய் கோட்டாட்சியர் (துணை ஆட்சியர்), போலீஸ் டிஎஸ்பி, வணிகவரி உதவி ஆணையர், கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர், ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர் உள்ளிட்ட பதவிகளில் 66 காலியிடங்களை நிரப்பும் வகையில் தேர்வினை நடத்தியது.
இத்தேர்வை தமிழகம் முழுவதும் ஒரு லட்சத்து 31 ஆயிரம் பேர் எழுதினர். இந்நிலையில் தேர்வுக்கான உத்தேச விடைகள் (கீ ஆன்சர்) டிஎன்பிஎஸ்சி, நேற்று இரவு இணையதளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிட்டது..அதில் ஏதேனும் மாற்றம் இருப்பின் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பதாரர்கள், ஜனவரி 14ஆம் தேதி மாலை 5-45 மணிக்குள் மணிக்கு ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க வேண்டும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
English Summary
Attention Group-1 exam written candidates..! - Key Answer Posted by TNPSC ..!