KOLNews

கெட்ட கனவுகள் ... தீய விளைவுகள்..! - தடுப்பது எப்படி..?

அனைவர்க்கும் இரவில் கனவுகள் வருகின்றன. குறிப்பாக அதிகமாக சாப்பிட்டுவிட்டு உடனடியாகப் படுத்தாலும், பலவித யோசனைகள் செய்து கொண்டு இருந்தாலும், மன கவலைகளுடன் படுத்தாலும் கனவுகள் வரும் .சில நேரங்களில் நல்ல கனவுகள் வரும் .சில நேரங்களில் தீய கனவுகளும் வரும் .தீய கனவுகள் வந்தால் தீய விளைவுகள் ஏற்படுமோ என்ற பயமும் ஏற்படும் .

இது போன்ற தீய கனவுகள் வராமல் இருக்க ,படுக்கப் போகும் முன்பாக கை ,கால்களைக் கழுவிக் கொண்டு தண்ணீர் இன்றி, துடைத்துக்கொண்டு திருநீறு பூசிக்கொண்டு கீழ்க்கண்ட தோத்திரத்தை நிதானமாக ஒரு முறை அல்லது மூன்று முறை மனதிற்குள் கூறவும். அல்லது வாய்விட்டுக் கூறவும் .மனதிற்குள், எனக்கு எவ்வித கெட்ட கனவும் வராது என்று மூன்று முறை கூறிக்கொள்ளவும், கெட்ட கனவுகள் உறுதியாக வராது .

                                       அச்சுதம் கேசவம் விஷ்ணும் ஹரிம் 

                                       ஸோமம்  ஜனார்த்தனம் ஹம்சம் 

                                        நாராயணம் க்ருஷ்ணம் ஜபேத்  

                                        துர் ஸ்வப்பன சாந்தயே 

Related imageதீய கனவுகளைக் கண்டால் ,கெடுதல் ஏதும் ஏற்படாமல் இருக்க காலையில் எழுந்த உடன் குளித்துவிட்டுக் கிழக்கு முகமாக உட்கார்ந்து கீழ்க்கண்ட சுலோகத்தைப் பத்து முறை கூறுங்கள். கண்ட  கெட்ட கனவுகளால் தீய பலன்கள் ஏற்படாது இது காக்கும் என்பது உறுதி .

                                       விஷ்ணும்  நாராயணம் க்ருஷ்ணம்

                                        மாதவம் மது ஸூதனம் 

                                        ஹரிம் நரஹரிம் ராமம் 

                                        கோவிந்தம் த்தி வாமனம் 

English Summary

Bad dreams ... evil effects ..! - How to prevent it?

Latest Articles

KOLNews