KOLNews

ஆன்லைன் ரம்மிக்கு தடை..! அவசர சட்டத்துக்கு ஒப்புதல் அளித்தார் தமிழக ஆளுநர்..!

தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட விளையாட்டுகளை தடை செய்வதற்கான அவசர சட்டத்தை தமிழக அரசு பிறப்பித்துள்ளது. இதற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துள்ளார். 

 முன்னதாக இது தொடர்பாக ஆளுநர் மாளிகையில் நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் , 

"ஆன்லைன் ரம்மி போன்ற இணைய வழி விளையாட்டுகளில் பணம் வைத்து விளையாடுவதன் மூலம் பொது மக்கள், குறிப்பாக இளைஞர்கள் தங்கள் பணத்தையும் வாழ்க்கையையும் தொலைத்து விடும் அவலத்தை தடுக்கும் விதமாக தமிழக அரசு சட்டத்தை இயற்ற உள்ளது.  இந்த அவசர சட்டம் 1930ம் ஆண்டு தமிழ்நாடு சூதாட்டம், சென்னை நகர காவல் சட்டம் மற்றும் தமிழ்நாடு மாவட்ட காவல் சட்டம் ஆகியவற்றில் சட்டத்திருத்தங்கள் மேற்கொள்வதன் மூலம் ஏற்றப்பட உள்ளது. இந்த சட்டம் ஏற்றுவதன் மூலம் இவ்விளையாட்டில் பணம் வைத்து விளையாடுவதில் ஈடுபடுத்தப்படும் கணினிகள் மற்றும் அது தொடர்பான உபகரணங்களையும் தடை செய்ய முடியும் தடையை மீறி விளையாடுபவர்களுக்கு ரூ 5000 அபராதம் 6 மாத சிறை தண்டனை வழங்கவும் வழி செய்யும். ஆன்லைன் ரம்மி விளையாட்டு அரங்கம் வைத்திருப்போருக்கு 10000 அபராதமும், 2 ஆண்டு சிறை தண்டனையும் வழங்க வழி செய்யும். 

இவ்விளையாட்டில் பணப் பரிமாற்றங்களை இணையவழி மூலம் மேற்கொள்வதை தடுக்கவும், இவ்விளையாட்டை நடத்தும் நிறுவனங்களின் பொறுப்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், தண்டிக்கவும் அவசர சட்டம் வழிவகுக்கும். எனவே, ஆன்லைன் ரம்மி போன்ற இணைய வழி விளையாட்டுகளை தடைசெய்யும் அவசர சட்டத்திற்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஒப்புதல் வழங்கியுள்ளார்", 

என தெரிவிக்கப்பட்டுள்ளது.

English Summary

Ban online rummy ..! Governor of Tamil Nadu approves emergency law ..!

Latest Articles

KOLNews