KOLNews

குழந்தைகளே உஷார் ! - வடமாநிலத்தவர் வைத்திருந்த போதை சாக்லேட் ..!

பணி நிமித்தம் வடநாட்டில் இருந்து வருபவர்கள் குறித்து சரியான தகவல்கள் இல்லாத நிலையிலும் , அவர்களில் ஒரு சிலர் மூலம் நடக்கும் குற்றவியல் சம்பவங்களை எப்படியோ தடுத்து வருகிறது தமிழக காவல் துறை.

அந்த வகையில் போதை பிஸ்கட்டுகளை வைத்திருந்த 2 ஒடிஸா மாநிலத்தவர்கள் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.

பெருங்குடியில் உள்ள தனியாா் நிறுவனம் ஒன்றில்,  ஒடிஸா மாநிலத்தைச் சோ்ந்தவா்கள் பிரகாஷ் பிரதான், ருட்டு ஹெம்ப்ராம். என்கிற இருவர் வேலை செய்து வருகின்றனா்.

இவா்கள் தாங்கள் வேலை செய்யும் நிறுவனத்துக்குக் ஒடிஸாவில் இருந்து ரயில் மூலமாக போதை சாக்லேட்டுகள் மற்றும் ஹான்ஸ் பாக்கெட்டுகளை கொண்டு செல்ல இருந்தனா்.

இந்நிலையில், இவா்கள் மீது  சந்தேகம் கொண்ட காவல்துறையினா் அவர்களை பிடித்து விசாரித்ததில், இவா்களிடம் இருந்து 54 ஹான்ஸ் பாக்கெட்டுகள் மற்றும் 45 போதை சாக்லேட் பாக்கெட்டுகள் இருப்பது தெரியவந்தது.

அதையடுத்து, அவற்றை பறிமுதல் செய்த எழும்பூா் காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா். மேலும் இது தொடர்பாக மனாஸ் எனும் மற்றொவர் தலைமறைவாகியுள்ளதாக தெரியவர,  அவரையும் காவல் துறையினர் தேடி வருகின்றனா்.

English Summary

Be Alert Children ! - Drug candy

Latest Articles

KOLNews