KOLNews

உடல் எடையை கூட்டாத முள்ளங்கி பொரியல்..!

உடல் எடையை கூட்டாத 'சைட் -டிஷ்'  சாப்பிட நினைப்பவர்களுக்கு முள்ளங்கி பொரியல் சிறந்த ஒன்று. அதை ருசியாக செய்வது எப்படி என பார்ப்போம் ..

தேவையான பொருட்கள் ( இரண்டு நபர்களுக்கு ) 

முள்ளங்கி - 200 கிராம்,  வெங்காயம் - 25 கிராம்,  தேங்காய் துருவல் - 5 கிராம், பொட்டுக்கடலை - 10 கிராம், காய்ந்த மிளகாய் -  2, கடுகு 5 - கிராம்  உளுந்து - 3கிராம், எண்ணெய் 5 கிராம்கறிவேப்பிலை , கொத்தமல்லி - 5 கிராம்,  உப்பு - சிறிதளவு.

Buy 1+1 Free - Radish Pusa Chetki - Desi Vegetable Seeds online from  Nurserylive at lowest price.

செய்முறை : முள்ளங்கி வெங்காயத்தை தனித்தனியே பொடியாக நறுக்கவும் . பொட்டுக் கடலையை பொடித்து வைக்கவும் . வாணலியில் எண்ணெய் காய்ந்ததும் கடுகு , உளுந்து , மிளகாய் போடவும் . பின்னர் வெங்காயத்தைப் போட்டு வதக்கி , முள்ளங்கியை கொட்டி ஒரு சிட்டிகை மஞ்சள்தூள் , உப்பு , கால்கப் தண்ணீர்விட்டு வேகவிடவும் காய்வெந்து நீர்வற்றும் சமயம் பொட்டுக்கடலை பொடி , தேங்காய் துருவல் சேர்த்து கிளறி இறக்கவும் . 

இதில் கிடைக்கும் மொத்த கலோரி - 175 . ஒருவருக்கு கிடைக்கும் கலோரி — 87.5

English Summary

Body weightless radish fry ..!

Latest Articles

KOLNews