KOLNews

"கத்தரிக்காய் காராமணி குழம்பு" - வீட்டு சமையல்

நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் உள்ள காராமணியை உணவில் சேர்த்துக்கொள்வது தற்போதைய காலகட்டத்திற்கு மிக நல்லது. 

 "கத்தரிக்காய் காராமணி குழம்பு" 

தேவையான பொருட்கள் (4 நபர்களுக்கு)

கத்தரிக்காய்                                    - 150 கிராம் 

காராமணி                                        -  50 கிராம் 

புளி கரைசல்                                    - 100 கிராம் 

மிளகு                                                  - 10 கிராம் 

சீரகம்                                                  - 5 கிராம் 

சோம்பு                                               - 5 கிராம் 

மஞ்சள் தூள்                                      -  2 கிராம் 

மிளகாய் தூள்                                   - 3 கிராம் 

தனியா தூள்                                      - 5 கிராம் 

வெங்காயம் பூண்டு விழுது           - 50 கிராம் 

நல்லெண்ணெய்                               - 5 கிராம் 

கருவேப்பிலை கொத்தமல்லி        - 5 கிராம் 

உப்பு                                                     - தேவையானது 

செய்முறை - 

காராமணியை 4 மணி நேரம் ஊறவைத்து, குக்கரில் 2 விசில் வைத்து எடுக்கவும். மிளகு, சீரகம், சோம்பை வறுத்து தண்ணீர் விடாமல் மிக்ஸியில் பவுடராக அரைத்து, புளிக்கரைசலுடன் மிளகு மசாலா பொடி அரைத்த வெங்காய பூண்டு விழுது உப்பு சேர்த்து கரைத்து வைக்கவும். கத்தரிக்காயை நான்காக வகிர்ந்து மஞ்சள் தூள் மிளகாய் தூள் சிறிதளவு உப்பு போட்டு வேக விடவும். பாதி வெந்தவுடன் குக்கரில் வைத்த காராமணியையும் போடவும். பின்னர்  புளி கரைசலை ஊற்றி கொதிக்கவிட்டு வாடை அடங்கியதும் இறக்கி கறிவேப்பிலை கொத்தமல்லி தாளித்து கொட்டவும்.

இதில் கிடைக்கும் மொத்த கலோரி 290 

ஒருவருக்கு கிடைக்கும் கலோரி 74.25

English Summary

"Brinjal - Caramani Curry" - Home Recipes

Latest Articles

KOLNews