KOLNews

முடியாது..! - மதம் மாறியவருக்கு கலப்பு திருமண சான்று கோரிய மனு தள்ளுபடி..!

ஒரே சாதியையோ, வகுப்பையோ சேர்ந்த கணவன் - மனைவிக்கு கலப்பு மண சான்று பெற தகுதியில்லை என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

பால்ராஜ், சேலம் மாவட்டம், மேட்டூரை சேர்ந்த கிறிஸ்தவ ஆதி திராவிடர் வகுப்பைச் சேர்ந்த இவர் , அருந்ததியர் சமுதாயத்தைச் சேர்ந்த அமுதா என்பவரை திருமணம் செய்து கொண்டார். அதையடுத்து, கிறிஸ்தவ ஆதி திராவிடர் என்பதால் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என சாதிச் சான்று பெற்ற அவர், தனக்கு கலப்பு மணம் புரிந்து கொண்டவர்களுக்கான சான்றிதழ் வழங்கக் கோரி விண்ணப்பித்தார். 

ஆனால், இந்த விண்ணப்பத்தை பரிசீலித்த மேட்டூர் வட்டாச்சியர், மதம் மாறியவருக்கு கலப்பு திருமணச் சான்று வழங்க முடியாது என கூறி, அவரது விண்ணப்பத்தை நிராகரித்து உத்தரவிட்டார்.அதையடுத்து, இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் பால்ராஜ்  வழக்கு ஒன்றை தாக்க செய்திருந்தார். 

இந்நிலையில் இவ்வழக்கு  நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, கடந்த 1997 ஆண்டு அரசாணைப்படி, மதமாறிய நபர்களுக்கு கலப்பு மண சான்றிதழ் வழங்க முடியாது என்பதால், மனுதரார் கோரிக்கையை நிராகரித்தது சரியே என அரசுத்தரப்பில் வாதிடப்பட்டது. இதையடுத்து, மதம் மாறியவருக்கு கலப்பு மண சான்று வழங்க உத்தரவிட முடியாது என கூறி மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

அத்துடன், மதம் மாறுவதால் ஒருவரின் சாதி மாறுவதில்லை எனக் குறிப்பிட்ட நீதிபதி, ஒரே சாதியையோ, வகுப்பையோ சேர்ந்த கணவன் - மனைவிக்கு கலப்பு மண சான்று பெற தகுதியில்லை என்றும், அவ்வாறு வழங்கினால் கலப்பு மணம் புரிந்தவர்களுக்கான சலுகைகள் தவறாக பயன்படுத்தக் கூடும் எனவும் நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.

English Summary

Can not..! - Petition seeking mixed marriage certificate for converts dismissed ..!

Latest Articles

KOLNews