KOLNews

பெண்கள் தர்ப்பணம் செய்யலாமா..?

தர்ப்பணம்..

நடைமுறையில் இன்னும்  பெரும்பாலும் ஆண்களுக்கே உள்ள உரிமையாக பார்க்கப்படும் ஒரு சம்பிரதாயம். இருப்பினும் சந்தர்ப்ப சூழல் சில சமயங்களில் ஆண்வாரிசுகள் அருகில் இல்லாமல் போகலாம். அது போன்ற நேரங்களில் வீடுகளில் பெரியவர்களிடத்தில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தும் விஷயமாகி இது விடும். 

ஆனால் இதற்கு தீர்வாக பெண்கள் தர்ப்பணம் செய்யலாம் என இராமாயண சம்பவத்தை எடுத்து காட்டுகிறார்கள் ஆன்மீக பெரியவர்கள்.

Death of Dasaratha, Ayodhya Kanda, Ramayana

ஒரு முறை ஸ்ரீராமர் தன் தம்பி இலக்குவனை தசரதனுடைய சித்தத்திற்கு திவச பொருட்களைக் கொண்டு வருமாறு அனுப்ப, நெடுநேரமாகியும் இலக்குவன் வராததால், தானே அவனைத் தேடிச் சென்றார். ஸ்ரீராமரும் பாசத்திற்குரிய குறிப்பிட்ட திதி முடியும் நேரத்திற்குள் வராமையால், சீதாபிராட்டியை தர்ப்பணம் திவசம் ஆகியவற்றை முன்னின்று நடத்தி முடித்து விட்ட ஒரு அற்புதமான நிகழ்ச்சி தான் அது.

பெண்கள் வெள்ளை எள் கொண்டு தர்ப்பணம் அளிக்க வேண்டும் ஆண் வாரிசு இல்லாத இடங்களில் பெண்கள் தங்கள் பெற்றோருக்கும் இறந்த கணவனுக்கு அவனுடைய மனைவியும் அசிரத்தை யால் அவநம்பிக்கையில் கணவன் தர்ப்பணத்தை செய்ய மறுகையில் அவன் அனுமதியுடன் மனைவியும் இவ்வாறாக பெண்களுக்கு தர்ப்பண பூஜை நிகழ்த்திட சகல உரிமைகளும் உண்டு. 

English Summary

Can women do Death rituals..?

Latest Articles

KOLNews